பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னத் தமிழய்யா ஜம்புலிங்கக் குருக்கள் 249 சங்கு,வில் ஆகிய படைகள் அணி செய்யும், நறுமணம், கமழும் திருத்துழாய் மாலை மார்பில் புரண்டசையும் திரண்ட தோளும், அழகிய கழுத்தும், கொவ்வைச் செவ்விதழும், காலையில் மலர்ந்த பாரிசாதமலர் போன்ற திருமுகமும், சோதிமயமாகத் திகழும் திருவபிடேகமும் கொண்ட திருமாலின் தரிசனம் கன்னனுக்குக் கிடைக்கின்றது.’ என்று விளக்குவார். கஜேந்திரனுக்கு மோட்சம் அளிக்கும்போது கொண்ட கோலத்துடனே கன்னனுக்கும் தரிசனம் தந்தார் என்பதைச் சுட்டுவார். இம்மையிலே கண்ணுற்றேனே’’ (இக்காட்சியை) என்று பன்முறை கன்னன் பேசுவது போலவே பன்னி உரைப்பார். இறுதியில் இந்த அடியை மெல்லிய குரலில் பலமுறை பாடி எங்கள் கவனத்தை #r#liLjm ff. பாடலைப் படித்தல் எளிது என்று அலட்சியம் செய்யும் ஆசிரியரிடம் ஒருநாளும் கவிஞனின் உணர்ச்சி தோன்ற முடியாது. பாடலைப் படித்தல் அரிய செயல் என்று எண்ணிப் பாடலை ஈடுபாட்டுடன் படிக்கத் தொடங்கும் ஆசிரியரிடமே இவ்வுணர்ச்சி எளிதில் தோன்றும். உண்மை யில், பாடலைப் படித்தல் என்பது உள்ளத்தையே அசைத்து விடக்கூடிய செயல்தான்; உணர்ச்சியுடன் படித்தல் பெறற் கரிய பேரின்பத்தை அடைவிக்கும் செயல், சில பாடல்களை உணர்ச்சியுடன் உரக்கப் படிக்கும்போது, அவ்வுணர்ச்சி உரக்கப் படிப்பதையே தடைபடுத்தவும் கூடும். உணர்ச்சியின் கொடு முடியினை எட்டும்போது இவ்வநுபவம் நிகழ்வதை அறியலாம். தன் கடமையை முடித்துக் கொண்டமைக்காகவும், இம்மையிலேயே அமலநாரணனைத் தான் காணப்பெற்ற தற்கும் பெருமகிழ்ச்சியுற்று அம்மகிழ்ச்சியைக் கண்ணனுக்கு இவ்வாறு தெரிவிக்கின்றான் கன்னன்.