பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நினைவுக் குமிழிகள்-1 தருமன்மகன் முதலான அரிய காதல் தம்பியரோ டெதிர்மலைந்து தறுகண் ஆண்மைச் செருவிலென துயிரனைய தோழற்காகச் செஞ்சோற்றுக் கடன்கழித்தேன்; தேவர்கோவுக்கு உரைபெறுநற் கவசகுண் டலமும் ஈந்தேன் உற்றபெரு நல்வினைப்பேறு உனக்கே தந்தேன்; மருதிடைமுன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே மாதவத்தால் ஒருதமியன் வாழ்ந்த வாறே. வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்; மதிபெற்ற திருவுளத்தான் மதிக்கப் பெற்றேன்; தேன் பெற்ற துழாயலங்கற் களப மார்பும் திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்; ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்; யான்பெற்ற பெருந்தவப் றென்னை யன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே'." இந்த இரண்டு பாடல்களையும் ஒன்றிரண்டுமுறை இசையூட்டிப் படித்த பிறகு தருமன் மகன், மலைந்து, தறுகண் செரு, தேவர்கோ, தமியன்: வான்பெற்ற நதி, தாள், அலங்கல், தைவந்து, பகழி. இருநிலம் என்பன போன்ற சொற்களின் பொருள்களை உரைத்துக் கொண்டே படிப்பார். (1) செஞ்சோற்றுக் கடன் கழித்தல், (2) இந்திர னுக்குக் கவச குண்டலம் ஈதல், (3) கண்ணனுக்கு ஈந்த நல்வினைப் பேறு, (4) கண்ணன் இரட்டை மருதமரத் திடையே தவழ்ந்தது. (5) கங்கை நீர் கமழும் திருவடி இவற்றிலடங்கிய வரலாறுகளை உற்சாகத்துடன் அற்புதமாக விளக்குவார். அதன் பிறகு மீட்டும் ஒருமுறை மூன்று பாடல் களையும் இசையூட்டிப் படிப்பார்; இது எங்களைக் கவிதை அநுபவத்தின் கொடுமுடிக்குக் கொண்டு செலுத்திவிடும், 23 டிெ. 248, 249