பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னத் தமிழய்யா ஜம்புலிங்கக் குருக்கள் 251 குருக்கள் அய்யா அவர்கள் வாழ்நாள் முழுவதும் எத்தனையோ சிறுவர்கட்கு அறிவினை நல்கி அவர்களின் முகமலர்ச்சியைக் கண்ணாரக் கண்டு அநுபவித்திருப்பார். இந்த அநுபவந்தான் அவர் பெற்ற பேறு. இந்த மூன்று பாடல்களையும் கற்பித்ததில் போர்க்களத்தில் கன்னனும் கண்ணனும் இருந்த சூழ்நிலையையே வகுப்பில் திரும்பப் படைத்து’ எங்களைக் கவிதைச் சுவையின் கொடுமுடிக்குக் கொண்டு செலுத்தும்போது எங்கள் முகத்தில் இன்பம் ததும்பி யோடுவதை எங்கள் முகமலர்ச்சியைக் கொண்டே அறிவார் . இதனைக் குருக்கள் ஐயா கண்ணுறும்பொழுது அவரும் பேரின்பக் கடலில் மூழ்கி விடுவார். இப்படி அவர் தம் வாழ் நாளில் எத்தனையோ வாய்ப்புகளைக் கண்டிருப்பார். இந்த அநுபவமே அவர்தம் துறையில் பெறும் உண்மையான ஊதியமாகும். கல்வியின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று சால்பினை வளர்ப்பது. ஆசிரியர் இதில் கவனம் செலுத்தாவிடில் சால்பிற்கு எல்லைக் கோடுகளை யாவர்தாம் வரையறுப்பர்? சால்பினை வளர்க்கும் பொறுப்பு ஆசிரியரையன்றி வேறு எவரும் மேற்கொள்ளல் இயலாது, அப்படி மேற்கொண்டா லும் தக்க பலனைக் காணல் இயலாது. ஆசிரியர்களே மாணாக்கர்களின் வீர வழிபாட்டிற்குரியவர்கள். ஆசிரியருக்கு அநுபவம் பெருகப் பெருகச் சால்பினை வளர்க்கும் பெருவழி மிகவும் வியப்பினைத் தருவதாக அமைகின்றது. அந்த வழியில் காணும் ஒவ்வொன்றும் புதியனவாகவே தோற்ற மளிக்கும். நன்மையும் தீமையும் நல்கும் ஆற்றலும் இவர்கள் கையில்தான் உள்ளது; இவர்கள்தாம் அதனைச் சரியாக உணர்தல் கூடும். இந்தப் பொறுப்பினை இவர்கள் சரியாக உணர்வார்களாயின் அது சுமக்க முடியாத அளவுக்குப் பெரிதாக இருப்பது தெரியவரும். கற்பித்தல் என்பது ஒருவரது பணியின் ஆற்றலையும் சாத்தியப்படக் கூடியதை