பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நினைவுக் குமிழிகள்-1 யும் காட்டுவதைப் போலவே, அவர்களது சிறுமையையும் எடுத்துக் காட்ட வல்லது. தாம் என்ன செய்யலாம் என்பதை யும் தம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் ஆசிரியர் காணும்பொழுது அவர் தம்முடைய சுவட்டிலேயே தாம் வகுத்துக் கொண்ட துறையிலேயே, சிலர் பெரிய நிலையை எய்துகின்றனர் என்று காண்கின்றார்; தம்முடைய ஆற்றலை யெல்லாம் கொட்டி ஒரு பாடத்தை முடித்தபிறகு தாம் உணர்வதைப் போன்ற பெருமிதத்தை வேறு எப்பொழுதும் அவரால் உணர முடிகின்றதில்லை. அவரிடம் பாடம் கேட்ட சிறுவர்கள் பள்ளியை விட்டு வெளிச்செல்லுகின்றனர்; ஆசிரியரும் சாதாரண மனிதராகி விடுகின்றார். ஆனால், அந்த ஒரு மணி நேரமாவது தம் வாழ்க்கை முழுத்தன்மை எய்தியது என்ற உணர்ச்சி அவரிடம் கட்டாயம் இருக்கத் தான் செய்யும், ஆசிரியத் தொழிலில் இல்லாதவர்களும் இத்தகைய பேரின்பத்தை அடையும் வாய்ப்பு உண்டு. ஒரு நல்ல கவிதையைப் படித்து அதன் சுவையை அநுபவித்தவர் களும், அந்தக் கவிதையைப் படித்த ஒரு சிறு கால அளவிலா யினும் தம்முடைய வாழ்க்கை முழுத்தன்மை எய்தியது என்பதை உணர்வர். ஆசிரியப்பணியின் சிறப்பு : ஆசிரியப்பணி என்பது நாம் சிறப்பாகப் பெறும் உரிமை; அது கீதாசிரியனின் பணியைப் போன்றது. அப்பணியுடன் ஒரு பெரிய பொறுப்பும் இணைந்தே வருகின்றது. நாம் என்றும் அப்பணிக்கு நம்மைப் பொருத்தப்பட அமைத்துக் கொள்வதே அது. என்றும் கவிதையநுபவத்துடன் வாழ்வதென்பது எளிதான செயலன்று. பிறவியிலேயே ஆசிரியக் கூறு சிறிதளவாவது அமையப்பெற்றவர்கட்கே அஃது இயலும். ஆசிரியத் துறையில் நம்பிக்கை கொண்டு பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெறுபவர்கட்கும் இது சாத்தியமாகும்.