பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னத் தமிழய்யா ஜம்புலிங்கக் குருக்கள் 253 எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்”* என்ற வள்ளுவர் வாக்கிலும் இவ்வுண்மை காணப்பெறுவதை அறியலாம். ஜம்புலிங்கக் குருக்கள் கற்பித்தது இன்றும் என் உள்ளத் தில் பசுமையாகவே உள்ளது. இவர் கற்பித்த முறையே என்னை இன்றளவும் கவிதைச் சுவையில் ஈடுபடுத்தி வருகின்றது என்பதை உணர்கின்றேன். இதுவே நான் பிற்காலத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகப் பணியாற்றியபோது என்னை நன்முறை யில் கொண்டுசெலுத்தியது என்பதையும் உணரமுடிகின்றது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்த மாதிரி கவிதை யநுபவம்” என்ற அரியதொரு நூலும் படைக்கக் காரணமாக இருந்தது என்றும் கருதுகின்றேன். என் ஆய்வில் கவிதையின் கொடுமுடி : நான் பிஎச்.டி. பட்டத்திற்கு ஆராய்ந்தபொழுது ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்டபொழுது கவிதையதுபவத்தின் கொடு முடியை எட்டியிருக்கின்றேன். பாசுரங்களை அநுபவிக்கும் பொழுது பல லிட்டர் கண்ணிர் பெருக்கெடுத்தோடியிருக் கின்றது. 'பழுதே பலபகலும் போயின என் றஞ்சி அழுதேன்’** என்ற பொய்கையாழ்வாரின் அநுபவத்தைப் பெற்றதுண்டு. ஆவியே அமுதே என நினைந் துருகி பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாட்கள்." 24. குறள்-666 25. முதல் திருவந் 16 26. பெரி. திரு.1.1:2