பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 நினைவுக் குமிழிகள்-1 என்ற திருமங்கையாழ்வாரின் அநுபவமும் என்னை ஆட்கொண்டதுண்டு. எம்.ஏ. வகுப்புத் தமிழ் மாணாக்கர் சட்கு இலக்கியத் திறனாய்வு கற்பித்தபொழுது அவர் களுடன் இந்த அநுபவத்தைப் பகிர்ந்து துய்த்ததுண்டு. பெரும்பான்மையான மாணாக்கர்கள் கவிதையைத் துய்ப்பது ஆசிரியரைப் பொறுத்தே அமைகின்றது. அலெக்ஸாந்தர் ஹேடோ என்பாரின் 'குழந்தை கவிதை யுலகில் புகுவதற்குக் காத்து நிற்கின்றது; அதற்கு வழி காட்டுவது ஆசிரியரின் பொறுப்பிலுள்ளது' என்ற கூற்று கவிதை பயிற்றும் ஆசிரியர்க்கு ஒரு கலங்கரை விளக்கு போல் அமையட்டும். குமிழி - 21 31. மாணவ விடுதி வாழ்க்கையில் சிறியில் மாணாக்கர் உணவு விடுதியின் வாழ்க்கை” இப்போது குமிழியிடுகின்றது. இப்போது 'மாதா பிதா குரு' என்ற மூன்று குரவரும் ஒருங்கிணைந்த மூர்த்தியாகத் திகழும் கே. இராமசந்திர அய்யர் நினைவிற்கு வருகின்றார். இவருடைய சீரிய முயற்சியால்தான் மாணாக்கர் விடுதி” உருவாயிற்று என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். நன்முறையில் கல்வி பெறுவதற்கு உடலும் உள்ளமும் நன்முறையில் அமைந்து இயங்க வேண்டும். இந்த "இரகசியத்தை நன்கு புரிந்து கொண்டவர் கே. ஆர். நல்ல சூழ்நிலையும் இதில்பெரும்பங்கு கொள்கின்றது என்பதையும் 27. The child stands waiting to enter the land of poet, and it lies with the teacher to lead the way-On the Teaching of Poetry P. 10