பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவ விடுதி வாழ்க்கையில் 255 நன்கு அறிந்தவர். இதனை நன்கு தெளிந்த சித்பவாநந்த அடிகள் திருச்சி-கரூர் இருப்பூர்திப் பாதையில் உள்ள திருப்பராய்த்துறையில் 'இராமகிருஷ்ண தபோவனம் கண்டு அதன் ஆதரவில் விவேகாநந்த வித்தியாவனத்தை இயங்கச் செய்து பல்லாண்டுகளாகக் கல்வித் தொண்டும் சமயத் தொண்டும் - ஒருவகையில் சமூகத் தொண்டும் - புரிந்து வந்ததைத் தமிழகம் நன்கு அறியும். இந்த அளவுக்குக் கே. ஆரின் கல்விதொண்டு அமையவில்லையாயினும் குரு விக்குத் தகுந்த இராமேசுவரம் என்றாற்போல தம் ஆற்றலுக்கேற்றவாறு இறைவன் திருவருள் துணையால் சிறிய அளவில் அருமையான கல்வித் தொண்டு புரிந்து வந் தார் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. பள்ளிக்கும் உணவு. விடுதிக்கும் சுமார் 2-3 ஃபர்லாங் தொலைவு இருக்கும். இந்தத் தொலைவுக்கு ஏற்றவாறு உணவு முறைகளை அமைத்தார். காலை - 9 மணிக்கு உணவு; நண்பகல் ஒரு மணிக்கு, சிற்றுண்டி; இரவு 7-30 மணிக்கு உணவு, காலையில் சிற்றுண்டி வைத்துக் கொண் டால் நண்பகலில் வேகமாகப் பள்ளியிலிருந்து திரும்பி அவசர அவசரமாக உணவு கொள்ள முடியாது என்பதற்காகத்தான். இந்த ஏற்பாடு. காலையில் வேண்டுவோர் மட்டிலும் தனிக் கட்டணத்தில் காஃபி அருந்தலாம்; மாலை காஃபி இல்லை; இரவு வேண்டுவோர் மட்டிலும் தனிக்கட்டணத்தில் பால் அருந்தலாம்; நடுத்தர வகுப்பினருடையவும் அதற்குச் சற்றுக் கீழ்நிலையிலுள்ளவருடையவுமான பொருவாதார நிலைக்கு ஏற்றவாறு மாணவர் விடுதி இயங்கி வந்தது. ஒருசில செல்வர் குடும்பத்தைச் சார்ந்த மாணாக்கர்கள் மட்டிலுமே காலை காஃபியையும் இரவு பாலையும் தனிக் கட்டணத்தில் கொண்டனர். உணவு விடுதிக்கு மிக அருகில் ஒரு சோழிய பிராமணரின் சிற்றுண்டிச்சாலை இருந்தது. குறைந்தவிலையில் இட்லி,தோசை,காஃபி அங்குக்கிடைக்கும்