பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவ விடுதி வாழ்க்கையில் 257 (எ.டு.) வாழி யாதன் வாழி யவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோளே யாயே, யாமே நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க எனவேட் டேமே ?? (யாய் - எம்பெருமாட்டி வேட்டோள் - விரும்பியிருந் தாள், மறைந்தொழுகினாள்; யாம் - தோழியராகிய யாம்; காஞ்சி - காஞ்சிமரம்; சினை - முட்டை, ஊரன் - மருத நிலத் தலைவன்.). இது தோழியின் கூற்றாக அமைந்த பாடல். புறத் தொழுக்கத்தில் நெடுநாள் ஒழுகி இது தகாது’ எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டும் தலைவியோடு ஒழுகி நின்ற காலத்தில் தலைவன் தோழியுடன் சொல்லாடி யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?’ என்று வினவியபொழுது அவள் சொல்லியது. தோழி கூறுவாள்: 'நீ எம்மைப் பிரிந்துறைந்த காலத்தே பெருந்தகைமை யுடைமையால் தலைவி நின்கொடுமையை ஆயத்தாரும் ஊராரும் அறிந்து நின்னைப் பழி துாற்றுதற்கு நாணித் தன் பெருந்துயரத்தைத் தன்னுள்ளே கரந்து கொண்டவளாய் அயலார்க்குத் தான் துன்பம் சிறிதும் இல்லாதாள் போன்று நடித்தனள்; அவள் ஆதன் வாழி' என்றும் அவினி வாழி' என்றும், நெற்பல பொலிக' என்றும் பொன் பெரிது சிறக்க’ என்றும் நீ அவளோடு உடனுறையுங் காலத்து நினைக்கற் பாலனவாகிய நலங்களையே விரும்புவாள்போல் காணப் பெற்றாள். 27. ஐங். 1. —17—