பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவ விடுதி வாழ்க்கையில் 259 மலர்கள் பூத்துக் குலுங்கி நிற்பது எங்கள் கண்ணில்படும். நீரோட்டத்தைத் தழுவிய நிலையில் தாழ்ந்திருக்கும் கொம்புகளில் சிறு மீன்கள் துள்ளி விழுந்து தங்கிப் பின் நீரில் குதிக்கும். இதனைக் கண்டு மகிழ்வோம். இன்றும் இத் தகைய காட்சியை முசிறியில் காணலாம்; திருவரங்கம் அம்மா மண்டபப் படித்துறையருகிலும் காணலாம். இந்தக் காட்சி இன்றும் என் மனத்தில் நிலைத்துள்ளது. இதற்குமேல், சங்க இலக்கியப் பயிற்சி பெற்ற பிறகு இக்காட்சி உள்ளுறையை விளக்குவதை அறிய முடிகின்றது. மீன்கள் மரக்கொம்புகளிலிருந்து நீரில் விழும்போது பூவின் நறுமணமும் மீனின் புலால் நாற்றமும் ஒருங்கே கலந்து கமழ்வதை அப்போது மாணாக்கர் நிலையில் கூர்ந்து பார்க்கும் திறன் இல்லையாயினும். இப்போது நினைந்து பார்க்க முடிகின்றது. இத்தகைய சிறப்புடையது மருதநிலம் என்று இலக்கியங்களில் வருணிக்கப் பெற்றிருப்பதை முசிறியில் நேரில் காணமுடிந்ததை இப்போது நினைந்து பார்க்கின்றேன். இலக்கியப் பயிற்சி பெற்ற பிறகு மருதநிலத் தலைவன் பரத்தையர் சேரியை அடுத்து வாழ்க்கைத் துணைவி யுடன் புகழ் பரவ வாழ்வதையும், இல்லறம் இனிதே நடைபெறுவதையும் சிந்தித்துப் பார்க்க முடிகின்றது. பரத்தையர் இடையே தலைவனைப் பற்றி வசப்படுத்திப் பிரிகின்றதையும் நினைந்து பார்க்க முடிகின்றது. இந்தப் பாடலில் நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் என்பது உள்ளுறையாகும். இந்த உள்ளுறையில் நறு மணம் கமழும் மலருடைய காஞ்சியையும் புலால் நாறும் சிறுமீனையும் ஒருங்கே உன்னுரர் உடைத்தாயிருத்தல் போன்று நீயும் இத்தகைய மாண்புடைய தலைவியையும் இழி குணமே நிரம்பிய பரத்தையரையும் ஒப்ப மதித்து ஒழுகா நின்றனை” எனத் தலைவனின் கொடுமையை