பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 நினைவுக் குமிழிகள்-1 உள்ளடக்கிக் கூறியுள்ளமையைக் கண்டு மகிழ முடிகின்றது. “ஆற்றங்கரையில் நறுமணமும் புலால் நாற்றமும் கலந்து பரவுவது போல, நின் வாழ்க்கையில் புகழும் பழியும் கலந்து ஊரில் பரவுகின்றது” என்பது விளக்கம், அன்று முசிறியில் பெற்ற நேர்காட்சி இலக்கிய நயத்தை உணர்வதற்குத் துணையாக இருப்பதை இன்று நீள நினைந்து பார்க்க முடிகின்றது. ஐங்குறுநூற்றைத் தொகுத்த ஆசிரியர் சங்கப்புலவராகிய புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழாரும், தொகுப்பித்த யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற அரசனும் சேர நாட்டவர்கள். ஆகவே, மருதத் திணையைச் சார்ந்த வேட்கைப் பத்து' என்னும் முதற் பகுதியின் பத்துப் பாடல்களிலும் தம் நாட்டுச் சேர வேந்தனாகிய 'ஆதன் அவினி' என்பான் வாழ்த்திச் சிறப்பிக்கப் பெற்றுள்ளமை யினால் இந்நூலில் மருதத்திணை முன்னரும், சேரர் துறைமுகப்பட்டினமாகிய தொண்டி என்னும் நகரினைச் சிறப்பித்துக் கூறும் தொண்டிப்பத்தினைத் தன்னுட் கொண்ட நெய்தல் திணை இரண்டாவதாகவும், அதன் பின்னர் கபிலர் பாடிய குறிஞ்சி நெய்தலின் பின்னர்க் கோக்கப் பெற்றன என்று இம்மூன்றற்கும் ஒருவாறு முறை கூறலா மாயினும் பாலையும் முல்லையும் இவற்றின் பின்னர் முறையே அமைக்கப் பெற்றமைக்குக் காரணம், ஒருவாற் றானும் விளங்கவில்லை என்பர் டாக்டர். உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள். 28. ஆதன் என்பவன் வாழியாதன் என்னும் சேரமான். இவன் கபிலரால் பதிற்றுப்பத்திற் பாடப் பெற்ற வள்ளற் பெருமான். இவனைச் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்றும் வழங்குவர். இவனுக்குப் பின்னர் இவன் பெயரால் ஒரு பழங்குடி நில்விய்து என்றுதெரி கின்றது. ஆதனவினி, ஆதன் எழினி, ஆதன் அழிசிஎன வரும் சேரமான்களின் பெயர்கள் இதற்குச் சான்றாகும்,