பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவ விடுதி வாழ்க்கையில் 261 சனிக்கிழமை தோறும் எல்லோரும் எண்ணெய்க் குளியலைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உணவு விடுதியிலேயே நல்ல ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பெரிய அண்டாவொன்றில் வெந்நீர் காய்ந்த வண்ணம் இருக்கும். தனித்தனியான மரத்தொட்டிகளில் தொட்டிக்கு ஒரு வாளி வீதம் அதிகச் சூடான வெந்நீர் விடப்பெறும்; குளிக்கும் அளவு சூடு இருக்குமாறு தண்ணிர் கலந்து விளாவி வைக்கப்பெறும். உணவு விடுதி வேலையாள் இந்தத் தொண்டை மிக அன்பாகச் செய்வான். நல்லெண்ணெயும் சிகைக்காய்த் தூளும் ஓரிடத்தில் வைக்கப்பட்டிக்கும்.அவரவர் கட்கு வேண்டிய அளவு இவற்றை எடுத்துக் கொள்ளலாம். சிகையுடன் கூடிய மாணாக்கர் ஒருவரும் இல்லையாதலின், அவரவர்களே எண்ணெய் தேய்த்துச் சிகைக்காயும் தேய்த்துக் கொள்வர்; அருகில் நீராடுவோர் முதுகைத் தேய்த்துவிட உதவுவர். இந்தச் சமயத்தில் கே. ஆருக்குத் துணையாகப் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் சிவராம கிருஷ்ணய்யர் அருகில் நின்று கொண்டு எண்ணெய்க் குளியல் திட்டத்தை மேற்பார்வை இடுவர். காலையிலும், இரவிலும் உணவு கொள்ளும்போதும், பெரும்பாலும் இவர் உணவு கொள்ளும் இடத்தில் நின்று கொண்டே கவனிப்பார், குறைந்த செலவில் அக்காலத்தில் மிகச் சிறப்பாக நடை பெற்ற ஓர் உணவு விடுதியைக் காண்டல் அரிது முசிறி உணவு விடுதியில் இரண்டு இராய அந்தணர்கள் பரிசாரக வேலையைக் கவனித்தனர். நான் திருச்சி, புனித சூசையப்பர் கல்லூரில் பயின்ற போது இலால்குடியில் பாலசுப்ரமணிய பிள்ளையின் (இவர் ஒர் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்) பொறுப்பில் இன்னும் குறைவான செலவில் ஓர் உணவுவிடுதி நடைபெற்று வந்த தைக் கேள்வியுற்றேன். என் அருமை நண்பர் விருத்தாசலம் மூலமாக, அவருடன் சென்று அந்த விடுதியையும் பார்வை