பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 நினைவுக் குமிழிகள்-1 யிட்டேன். இங்கு காஃபி தலை காட்டுவதில்லை. சைவப் பரிசாரகர்கள் சமையல் வேலையைக் கவனித்தனர். முசிறி யில் உணவு, சிற்றுண்டி வாழை இலையில் பறிமாறப் பெற்றன. இங்கு ஒவ்வொருவரும் தமக்கென வைத்துக் கொண்டிருந்த தட்டுகளில் பரிமாறப் பெற்றன. உணவுக்கு ஒருபெரிய தட்டும், காய்கறிக்கு ஒருசிறிய தட்டும் ஒவ்வொரு வரும் கொண்டிருந்தனர். இவற்றை அவரவர்களே கழுவித் தூய்மை செய்து மரச் சட்டத்தினாலான அடுக்கில் வரிசை யாக வைத்துக் கொள்ள வேண்டும். நான் சிறுவயதில் மோர், தயிர், நெய் ஏராளமாக உண்டதாக என் அன்னை சொல்வார்கள்; ஏதோ திருஷ்டி யின் காரணத்தால் இவற்றை உண்ணும் நிலை இல்லாது போயிற்று. எப்படியோ கே. ஆர். என்னை தயிர், மோர் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார். முதலில் பலவிதமான தயிர்ப் பச்சடிகளை உட்கொள்ளும் பழக் கத்தை ஏற்படுத்தி விட்டார்; வெங்காயம், தேங்காய், காரட், வெள்ளரிக்காய், தக்காளி போன்றவை கலந்த தயிர்ப் பச்சடிகளின் சுவையைக் காட்டச் செய்தார்: அவற்றில் சுவையை உண்டாக்கினார் . மோர் நன்றாகக் கலந்து எலுமிச்சை பழம், இஞ்சி, பெருங்காயம், ’கறிவேப்பிலை முதலியவற்றைச் சேர்த்து மணமூட்டி உட் கொள்ளச் செய்துவிட்டார். இவற்றில் பழக்கம் ஏற்பட்ட பிறகு இன்றளவும் இவையில்லாமல் உணவு கொள்ளலில் மன நிறைவு ஏற்படுவதில்லை. சுவையாகச் செய்யப்பெற்ற "ததியோதனம்’ இப்போது வானமிழ்தம்போல் இனிக் கின்றது. அதனை மிக்குச் சுவைத்து உண்பேன். என்னை நெய் உண்ணச் செய்த முயற்சி : கே. ஆர். அவர்களால் என்னை நெய் உட்கொள்ளச் செய்ய இயல வில்லை, எவ்வளவோ சாணக்கியம் செய்து பார்த்தும் அது