பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவ விடுதி வாழ்க்கையில் 263 என்னிடம் பலிக்கவில்லை. ஒரு சமயம் காலையில் இராகவேந்திரராவ் என்ற பரிமாறும் இளைய பரிசாரகரிடம் சோறு எடுக்கும் தட்டில் இரண்டு கரண்டி நெய்யை விடச் சொல்லி பரிமாறிக் கொண்டு வரும்போதே நெய் விட்ட பகுதியை என் இலையில் தள்ளிவிடச் செய்தார். பருப்பு போட்டுப் பிசைந்த உணவை வாயில் வைத்ததும் உமட்டிக் கொண்டு வாந்தி பண்ணும் நிலை ஏற்பட்டது. உணவு உணவு கொள்ளாமல் எழுந்து விட்டேன். பிறகு வேறு இலை போட்டு கொண்டேன். பிறிதொரு சமயம் இரவில் ஒரு ஞாயிறன்று இதே முறை கையாளப் பெற்றது. வெங்காயச் சாம்பார் கலந்த உணவை வாயருகில் கொண்டு சென்றதும் உமட்டிக் கொண்டு வந்தது; உணவு கொள்ளாமல் எழுந்து விட்டேன். பிறகு வேறு இலை போட்டு உணவு கொண்டேன். உணவு வகைகளைப்பற்றியும் அவற்றிலுள்ள சத்துக் களைப்பற்றியும் அதிகமாகப் படித்து வந்தாலும் உணவில் நெய் கலந்து சாப்பிட முடியாத நிலையை எண்ணும்போது எனக்கே வியப்பாக உள்ளது. நானே விருப்பத்துடன் முயன் றாலும் முடியவில்லை. நெய் தோசை சாப்பிடுகின்றேன். நெய்யால் செய்யப் பெற்ற இனிப்பு வகைகளைப் பிரியமாக உட்கொள்ளுகின்றேன். ஆனால் இட்லி - சாம்பாரில் நெய் கலந்து சாப்பிட்டால் உமட்டுவதுபோல் வருகின்றது. இன்றளவும் நெய் கலந்து பருப்புச் சோறு, சாம்பார் சோறு உண்பதே இல்லை. எனக்கே இது வியப்பாக இருக்கின்றது. வாரந்தோறும் புதன்கிழமை சந்தை. காய்கறிகள் மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கும். நாடோறும் ஒருவித அட்டவணைப்படி சாம்பார், கறி, கூட்டு. அப்பளம் பச்சடி விதவிதமாக மாறிவரும். சனிக்கிழமை இரவு வற்றல் குழம்பு; ஞாயிற்றுக்கிழமை இரவு உருளைக்கிழங்கு கறி, வாழைக்காய் வறுகல். வெங்காயச் சாம்பார் தவறாது