பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 நினைவுக் குமிழிகள்-1 இருக்கும். அன்று அப்பளம் இல்லை. செவ்வாயன்று மிஞ்சின காய்கள் ஒன்று சேர்ந்து அவியலாக உருவெடுக்கும். ஒன்றி ரண்டு நாட்களில் காலையில் மோர்க்குழம்பு (பூஷணிக்காய், சுட்ட வெண்டைக்காய், அல்லது கத்தரிக்காய் தானுடன்) இருப்பதுண்டு. ஒன்றிரண்டு நாட்களில் கீரைக் கூட்டு கட்டாயம் இருக்கும். சிவராம கிருஷ்ண அய்யர் கறிகாய் கள் வாங்குவதிலும் அவை சமையலில் பயன்படுவதையும் மிக நன்றாகக் கவனிப்பார். உணவு விடுதியில் தங்கியிருப் பவர்கள் நல்ல உடல் நலத்துடன் திகழ்ந்தனர். யாரும் நோய்வாய்ப் பட்டனர் என்ற செய்தியே இல்லை. என் மூன்றாண்டு விடுதி வாழ்க்கையில் நானும் கணபதியும் நோய் வாய்ப் பட்டதே இல்லை. நாடோறும் நண்பகல் சிற்றுண்டியும் ஒருவிதத் திட்டப் படி அமைந்திருக்கும். பெரும்பாலும் வர்க்க அன்னங்கள் தாம் திட்டத்தில் அமையும். எலுமிச்சை, தேங்காய், கத்தரிக் காய் (வாங்கிபாத்), தக்காளி, சாதவகைகள் மாறிமாறி வரும். ஏதாவது ஒருநாள் அரிசி உப்புமா இருக்கும். சனிக் கிழமை இட்டிலி அல்லது தோசை திட்டத்தில் அமையும். ஞாயிற்றுக் கிழமையன்று ஒர் இனிப்பு (ரவா, சேமியா கேசரி, மைசூர்பாகு இவற்றில் யாதாவது ஒன்று), ஒரு காரம் (பஜ்ஜி அல்லது வடை அல்லது கலவை-இவற்றில் ஒன்று) சிறப்புச் சிற்றுண்டியாக அமையும். உடலோம்பலில் மட்டிலும், உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.” என்ற திருமூலரின் தத்துவம் செயற்பட்டது என்று சொல்லலாம், 29. திருமந்திரம் - காயசித்தி உபாயம் - 1