பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-32 32. மாணவர் விடுதி வாழ்க்கைஒவ்வாத கூறுகள் மழுங்கல் அந்தக் காலத்தில் கல்லூரி - பள்ளி வாழ்க்கையில் உணவு விடுதிகளின் பங்கு மிகச் சிறப்புடையதாக இருந்தது. உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையில் மூன்றாண்டுகள் உணவு விடுதியில் வாழ்ந்து நிறைந்த பயன் பெற்றேன். கல்லூரி வாழ்க்கையில் திருச்சியில் உணவு விடுதி வாழ்க்கையை மேற் கொள்ளவில்லை. காரணம் வறுமையே. அதைவிடக் குறைந்த செலவில் நல்ல உணவு, நல்ல சிற்றுண்டி, கல்லூரி அருகிலேயே தனிஅறை பெறமுடிந்தது. இந்தத் தங்கும் விடுதியிலும் ஐந்தாறு அறைகள் இருந்தமையால் உணவு விடுதியில் பெறும் பண்புகளனைத்தும் பெற வாய்ப்பாக இருந்தது. சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி யில் பயின்றபோது ஓராண்டுமாணாக்கர் உணவுவிடுதியிலேயே தங்கியிருந்தேன். அக்காலத்தில் நகரத்தில் இந்த விடுதி நல்ல சூழ்நிலையை நல்கியதால்-செலவும் குறைவாக இருந்தமை யால்-உணவு விடுதியிலேயே தங்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டேன். முசிறியில் மாணாக்கர் விடுதியில் தங்கியிருந்தபோது எல்லா வசதிகளும் வாய்ப்பாக இருந்தன. மாணாக்கர்கள் ஒருவரோடொருவர் கலந்து பழகவும், தனிப்பட்டவர் களிடம் முந்திரிக் கொட்டைபோல் முட்டிக் கொண்டு திகழும் ஒவ்வாத கூறுகள் (Angularities) தேய்ந்து மழுங்கவும் நல்ல வாய்ப்பாக இருந்தது. ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை அவ்வப்போது தலை தூக்கினாலும் பொதுவாக அப்பண்பு கட்டுக்குள் அடங்கியே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். நான் படித்தபோது மூன்று