பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 நினைவுக் குமிழிகள்-1 மேட்டுக் குடியைச்(Aristocrat)சார்ந்த மாணாக்கர்கள் படித்த தாக நினைவு. அவர்கள் கீழ்ப்படிவங்களில் பயின்றவர் களாதலின், தங்களைப்பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்ளவோ, தடபுடல் வாழ்க்கையைக் காட்டிக் கொள்ளவோ வாய்ப்புகள் ஏற்படவில்லை. ஒரே ஒரு மாணாக்கன் மட்டிலும் தொலையானத்தம் என்ற ஊரி லிருந்து (முசிறியிலிருந்து முசிறி - துறையூர் சாலையிலுள்ள ஜம்புநாதபுரத்துக்கு அடுத்துள்ளது) படித்ததாக நினைவு, நாட்டுப் புறத்திலிருந்து வந்தவனாதலாலும், செல்லப் பிள்ளையாக வீட்டில் வளர்ந்தமையாலும் பேச்சில் பொருத்தமின்றி ஏதாவது உளறிக் கொட்டுவான். அவன் பெயர் இராமசாமி என்பதாக நினைவு. நான் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அவன் இரண்டாம் படிவத்தில் சேர்ந்து படித்ததாக நினைவு. புதன்கிழமை மாலை வாரச் சந்தையிலிருந்து ஏழு நாட்களுக்குத் தேவை யான கறிகாய்க கை வண்டியில் வந்து இறங்கும். அவற்றுள் ஒன்றிரண்டு பெரியபறங்கிக் காய்களும் இருக்கும். இவற்றைப் பார்த்ததும் இராமசாமி தன் வீட்டிலிருக்கும் ஏராளமான பரங்கிக் காய்களை நினைத்துக் கொள்வான். உடனே இந்த உணவுவிடுதிகொள்ளாத அளவு பறங்கிக் காய்கள் என்iட்டில் உள்ளன' என்று சொல்வான்; சாதாரணமாகத்தான் சொல்வான். பெருமையடித்துக் கொள்ளும் போக்கில் அவன் பேச்சு இராவிடினும் சில மாணாக்கர்கள் அவன் பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டு கிண்டல் செய்வார்கள்; கேலி யுடனும் பேசுவார்கள். இராமசாமியின் முகம் மிகவும் சுருங்கி விடும்; பேய் அறைந்தவன் போலாகி விடுவான். யாரும் அவனுடன் பரிந்து பேசுவதற்கு முன் வருவ தில்லை. அவனைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கும். 'தம்பி இராமசாமி, வாரந்தோறும் பத்துக் காய்கள் இனா மாக அல்லது குறைந்த விலையில், அனுப்ப ஏற்பாடு செய்க. உன் பெயரைச் சொல்லிக் கொண்டு நாம் எல்லோரும்