பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாத கூறுகள் மழுங்கல் 267 சாப்பிடுமோம். இதனால் உணவு விடுதியின் தினசரி வீதம் (Daily rate) ஒரனாவாவது குறையும். என்னைப்போன்ற ஏழை மாணாக்கர்களுக்கும் உதவி செய்ததாகவும் இருக்கும். உனக்கும் உணவுக் கட்டணம் சிறிது குறையும்' என்பேன். இதைக் கேட்டவுடன் இராமசாமியின் முகம் மலர்ச்சியுறும். அவனுக்குப் பரிந்து பேசும் என் இயல்பைக் கண்டவுடன் 'அண்ணா அண்ணா” என்று என்னுடன் நெருங்கிப் பழகுவான். கள்ளம் கபடமற்ற அவன் பேச்சை விடுதியில் ஒரு சிலரே புரிந்து கொள்வார். இறைவழிபாடு:மாலையில்: நான் நான்காம் படிவம் படித்த போது சேர்குடியிலிருந்து இரா. இராமலிங்கம் என்ற சிறுவன் (இப்போது உதவி - நீதிபதியாகப் பணியாற்றிச் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவர்) ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருந்தான். வடமொழி பயின்று வந்தான். நாடோறும் மாலையில் ஏழு மணிக்குக் கலைமகள் படத்தின் முன்னிலையில் அரைமணி நேரம் வழிபாடு நடக்கும்; இது கட்டாயம் இல்லையாதலின் ஒரு பதினைந்து பேர்தான் வழிபாட்டில் கலந்து கொள்வர். இராமலிங்கம் யாகுந்தேன்து துஷாரஹார தவளா” என்று தொடங்கும் கலைமகள் தோத்திரப் பாடலை ஓதுவது மிக அற்புதமாக இருக்கும். இன்றும் அந்த இனிமையான குரல் என் காதில் ஒலிப்பது போன்ற உணர்வு தோன்றுகின்றது. ஒவ்வொரு வரும் தத்தமக்குத் தெரிந்த ஏதாவது ஒரு தோத்திரப் பாடலைப் பாடுவதுண்டு. நான் இயல்பாகவே நாணும் தன்மையுடையவன். ஏதாவது ஒரு தோத்திரம் சொல்ல வேண்டும் என்று கே. ஆர். வற்புறுத்துவார். ஒரு சமயம் துணிவு பிறந்து,