பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நினைவுக் குமிழிகள்-1 தடித்தஓர் மகனைத் தந்தையிண் டடித்தால் தாயுடன் அணைப்பள்; தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்:இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப் பாஇனி ஆற்றேன்."" என்ற அருட்பாவை ஓதுவேன். நல்ல இசையோடு ஒதுவேன் அல்லேன். பிறிதொரு சமயம், அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்தஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெரு மானே! இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே." என்ற திருப்பாடலைப் பாடுவதுண்டு. என் தம்பி (ஒன்று விட்ட சகோதரன்) பாட்டுப் பாடுவதில் நாணப்படாதவன். சற்று இசையுடனும் பாடவல்லவன். அப்பாநான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்; ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்; எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே, எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்; 30. இராமலிங்க அடிகள் ஆறாம் திருமுறை-பிள்ளைச் சிறு விண்ணப்பம் - 1 31. திருவா. பிடித்தபத்து - 3