பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாத கூறுகள் மழுங்கல் 269 செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்; திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்: தப்பேது நான் செயினும் நீபொறுத்தல் வேண்டும்; தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே." என்ற திருவருட்பாவை அருமையாகப் பாடி அனைவரையும் மகிழ்விப்பான், பிறிதொரு சமயம், சங்கநிதி பதுமநிதி யிரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம், மாதேவர்க் கேகாந்தர் அல்லாராகில்; அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைகரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே...'" என்ற அப்பர் தேவாரத்தைப் பாடியதாக நினைவு. நாங்கள் இருவரும் இந்தப் பாடல்களையே பாடும் முறை வரும் போதெல்லாம் பாடுவோம். பெரும்பாலும் கே. ஆர். வழிபாட்டின்போது இருப்பார். சிவராமகிருஷ்ணய்யர் கட்டாயம் இருப்பார். மாணாக்கர்கள் பாடும்போது இரு வருமே மெய்மறந்து நிற்பர். எப்பொழுதாவது ஒன்றிரண்டு நாட்கள் தலைமையாசிரியர் செல்லய்யா வந்து போவதுண்டு. வடிவகணிதத்தில் நற்பயிற்சி : வடிவ கணிதத்தில் கடாத் தீர்வு (Rider) கணக்குப் போடுவதில் எனக்கு வெறி அதிகம். கே.ஆர். அவர்கள் ஊட்டிய சுவையே இந்த வெறிக்குக் காரணமாகும். ஆறாம் படிவத்தில் படித்த இராமகாதனை 32. இராமலிங்க அடிகள்-ஆறாம் திருமுறை. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்.1 . 33. தேவாரம் 6.95 1 10