பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நினைவுக் குமிழிகள்-1 அடிக்கடி துணைக்கு நாடுவேன். அவன் நேர்பார்வை யில்லாமல் கீ ழ் ப் பார் ைவ யி லும் பக்கப்பார்வையிலும் பார்க்கும் பழக்கமுள்ளவனாதலால் அவனை மிஸ்டர் நரி (Mister Fox) என்று செல்லமாக அனைவருமே அழைப்பர்; அவன் மட்டும் என்னை மிஸ்டர் நெய் (Mister Ghee) என்று அழைப்பான், கால் ஊனமுள்ளவனைத் தாண்டவராயப் பிள்ளை என்று அழைப்பது போல நெய் உண்ணாத என்னை இத்திருப்பெயரிட்டு அழைப்பான் அன்பாக; இருவரும் கடாத்தீர்வு காண்பதில் அதிக நேரம் செலவழிப்போம். மாலை நேரங்களிலும் வார விடுமுறை நாட்களிலும் அதிக நேரம் இவ்வாறு கழியும். பொறியியல் மேற்பார்வையாளர் (Engineernig Supervisor) oauff (Quuä (5606016, ©dianaus) எங்கள் விடுதியில் உணவு கொண்டிருந்தார். அவர் வரும் போதெல்லாம் வடிவகணிதக் கணக்கைப் போட அவரிடமும் உதவி பெறுவதுண்டு. இயற்கணிதத்திலும் இவ்வாறு கணக்குகளைக் கேட்டுப் போடுவதுண்டு. இதில் ஐயம் அதிகம் எழுவதில்லை; அப்படி எழுந்தாலும் அந்த ஐயம் நீங்குவதற்கு அதிகக் காலம் கழிவதில்லை. உணவு விடுதியில் இருந்ததனால் கணிதத்தில் என் திறமை பலர் பாராட்டும் வண்ணம் வளர்ந்து செழித்தது. கல்லூரியிலும் கணிதத் திலும் அறிவியலிலும் இச்செழிப்பு மேலும் அதிகரித்தது. வாழ்க்கையில் ஆசிரியத் தொழிலில் புகுந்த பிறகு (துறையூரில் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியனாக வாழ்க்கை தொடங்கியது) சிறந்த முறையில் கணக்கையும் அறிவியலையும் கற்பித்து திறனுள்ள நல்லாசிரியன்’ என்ற பெயர் எடுத்தேன். கே.ஆர். கணிதத்தில் ஊட்டிய தாய்ப் பாலின் ஊட்டம் உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான கடாத் தீர்வுக் (Rider) கணக்குகளைப் போடத் தூண்டியது. மேட்டுர் சுற்றுலா : நான் ஐந்தாம் படிவத்திலிருந்த பொழுது கே.ஆர்., இராமநாதப்பிள்ளை இவர்களின்