பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாத கூறுகள் மழுங்கல் 271 முயற்சியால் மேட்டுருக்குக் குறைந்த செலவில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. மாணாக்கர் உணவு விடுதியில் தங்கியிருந்தவர்கள் மட்டிலும் இதில் கலந்து கொண்டதாக நினைவு. ஏலூர்ப்பட்டி இராமசாமி ரெட்டியாருக்குச் சொந்த மாக E.N R, என்ற பெயரில் திருச்சி-சேலம் சாலையில் ஒன்றிரண்டு பேருந்துகள் ஓடிக் கொண்டிருந்தன. அவர் குறைந்த கட்டணத்தில் முசிறியிலிருந்து மேட்டுருக்குப் போய்வர பேருந்து வசதி செய்து தந்தார். காலை 7 மணிக்கும், இரவு 0 மணிக்கும் முறையே சிற்றுண்டி, உணவு விருந்துகளை அளித்தார். மேட்டுரில் மட்டிலும் எங்கிள் செலவு. ஒரு நாள் பயணம்தான். மேட் டூரில் அணைகட்டப் பெற்று முக்கால் பங்கு முடிந்திருந்தது. அணையின் இரண்டு பக்கங்களிலும் வேலை முடிவுற்றிருந்தது. அணையின் நடுவில் சுமார் 100 அடி மூடப்பெறாமல் இருந்தது; அதன் வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. விரைவில் அணை வேலை முடிய வேண்டும் என்ற வேகம் காணப்பெற்றது. எம்மருங்கும் வேலைகள் தரிதமாக நடைபெற்றன. செங்கோபுரம் (Red Tower) கருங்கோபுரம் (Black Tower) என்ற இரண்டு கோபுரங்கள் பல்வேறு அளவுள்ள கருங்கல் சல்லிகளையும், கருங்கல் பெரிய துண்டு களையும் இரயில் பாரவண்டிகளில் (Truck) மேலே அனுப்பிக் கொண்டிருந்த காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. சில இடங்களில் அணைகளின் உச்சியில் இரண் டிரண்டு தண்டவாளங்கள் நீட்டிய வண்ணம் இருக்கும்; இந்தத் தண்டவாளங்களில் பாரவண்டிகள் பொருந்தும்படி யாக இருக்கும் மின்காந்த விசையின் இயக்கத்தால் சல்லிகள் நிறைந்த பாரவண்டிகளை இரண்டு கோபுரங்களும் மேலே ஈர்த்து அவற்றைத் தண்டவாளங்களின்மீது வைத்துவிடும் தண்டவாளங்கள் அணையை நோக்கிச் சற்றுச் சரிவாக இருந்தமையால் பாரவண்டிகள் தாமாகத் தண்டவாளங்