பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நினைவுக் குமிழிகள்-1 களில் இயங்கித் தாம் கொண்ட பளுவைக் காவி செய்துவிடும் பிறகு மின்காந்த விசையால் காலி பாரவண்டிகள் ேேம் கொணரப்பெறும்; மீண்டும் வண்டிகளில் சல்லிகள் நிரப்பப் பெற்று மேலே கொண்டு செல்லப்பெறும். இவ்வாறு மிக எளிதாக இயந்திரங்களின் மூலமாகவே சிறிய சல்லிகள், பெரிய சல்லிகள், பல்வேறு அளவுள்ள கற்கள் இவை மேலே ஏற்றப்பெறும். அணையின்மேல் உள்ளவர்கள் இவற்றைச் சிமிட்டியுடன் கலந்து கட்டடத்திற்குப் பயன்படுத்திக் கொள்வர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது தண்ணி ருக்குப் பஞ்சமா? அணையிலிருந்தே பம்புகள் மூலம் தண்ணிர் எடுத்துக் கொள்ளப்பெறும். இக்காட்சிகள் எங்களுக்குப் பெருவிருந்தாக இருந்தன. அறிவியலின் அற்புதத்தை இங்கு நடைபெற்ற பல்வேறு செயல்களின் மூலம் ஒரே இடத்தில் காண முடிந்தது. அணையில் கீழ்ப்பகுதியில் அணையின் நெடுக வளை முகடு அமைப்பில் (Arch) காலி இடம் இருந்தது. இந்த இடத்தில் சல்லிகளும் கற்களும் கொண்ட சிமிட்டிக் கலவையை நிரப்பினால் சில கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்தச் செலவைக் குறைக்க இந்த ஏற்பாடு என்றும், தவிர இந்த ஏற்பாட்டினால் அணையின் பலம் அதிகரிக்கும் என்றும் எங்களுடன் வந்த இராமநாதப்பிள்ளையும் உணவு விடுதியில் உறவு கொண்டிருந்த பொறியியல் மேற்பார்வை யாளரும் மிக நன்றாக விளக்கினார்கள். பொறியியல் மேற் பார்வையாளர் மிகநல்லவர்; பொறுமையுள்ளவர்.சில சமயங் களில் அவர்உணவு கொள்ள வரும்போது, அவருக்கு ஒய்வு இருந்தால், அவரிடம் வடிவகணிதத்தில் பல கடாத்தீர்வுக் கணக்குகளில்போடுவதில் ஐயங்களைப் போக்கிக்கொள்வேன். உணவு விடுதியில் நான் ஒருவனே அவரிடம் அதிகமான உதவிகள் பெற்றதுண்டு. வேறு எவரும் பாட விஷயங்களில் நெருங்கிப் பழகாமல் இருந்ததாலும் நான்மட்டிலும் அதிக