பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V, திருச்சியில் - கல்லூரி வாழ்வில் குமிழி-33 33. புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்தது 1934ars; 34. மாதத்தில் பள்ளியிறுதித் தேர்வு எழுதினேன். நன்றாக எழுதினேன். சராசரி 60 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது மாணாக்கனாகத் தேர்ச்சி பெற்றேன். அத்தக் காலத்தில் இது நல்ல மதிப்பெண். அக்காலத்தில் மாணாக்கர் களும் பெற்றோர்களும் இறைவனுடைய கருணையினால் தான் மதிப்பெண் கிடைக்கின்றது என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். தேர்வில் பார்த்தெழுதுதல், துண்டுத் தாள்களில் எழுதிக் கொண்டுபோய் அவற்றைத் தேர்வில் பயன்படுத்துதல் போன்ற பழக்கங்கள் இருந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் ரூ. 250 = கொடுத்து அரசுத் தேர்வுச் செயலர் மூலம் தேர்ச்சி பெறலாம் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. ஆசிரியர்களும் சில பெரியோர்களும் பேசிக் கொண்டதைக் கேட்டிருக்கின்றேன். இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதைப்பற்றிதான் சிந்தித்ததே இல்லை. தேர்வு நடைபெறுங்கால் இன்று மாணாக்கர்கள் கையாளும் முறைகேடான வழிகள், கையூட்டுக் கொடுத்து மதிப்பெண் பெறுதல், அதிகமாகக் கொடுத்து முதல்