பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்தது 275 வகுப்பில் தேர்ச்சி பெறுதல், அதிகமாகக் கொடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுதல், இதற்குச் சில ஆசிரியர் களும் தேர்வுகள் நடத்தும் அ லு வ ல கத் தி லே யே வேலியே பயிரை மேய்ந்தாற்போல் சில அலுவலர்களும் உடந்தையாக இருத்தல் போன்ற முறைகேடான நடவடிக்கைகள் உழைத்துப் படிக்கும் உள்ளங்களை மிகவும் வருத்துகின்றன. பணம் பத்துவிதம் செய்யும் என்ற முதுமொழியின் உண்மையை இன்று நாம் நேரில் காண்கின்றோம். கேரளத்தில் நடைபெற்ற ஊழல்கள் இன்றும் நன் மாணாக்கர்களைத் திகிலடையச் செய்து வருகின்றன. இந்நிலை எங்குக் கொண்டுபோய் விடும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். மதுரைப் பல்கலைக் கழகத்தில் இந்த மதிப்பெண் ஊழல்’ நாடகமும், அதன் கிளைக் கதையாக பட்டங்கள் வழங்கும் நாடகங் களும் நடைபெற்றதாகச் செய்தித்தாள்கள் சிரித்தன. அண்மையில் அஞ்சல் வழிக்கல்வி மூலம் பி.காம். தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஒருவருக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் எம். காம். பட்டம் (தவறுதலாக) வழங்கிவிட்ட செய்தி தினகரன்’ என்ற நாளிதழில் (பட்டச் சான்றிதழ் நகலுடன்) வெளி வந்து அறிஞர்களைத் திடுக்கிடச் செய்தது. இன்று எம்மருங்கும் நேர்மையற்ற போக்கு பெருவழிக்காகக் காணப்படுகின்றது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்பது இன்று காணும் உண்மை. இப்படியே 'தில்லுமுல்லு’ செயல்கள் நடைபெற்று வந்தால் எதிர்காலம் எப்படி மாறும் என்று சொல்லுவதற்கில்லை. உண்மையாக உழைத்துப் படித்து அதிக மதிப்பெண் பெறுபவர்கள் பின்னுக்குத் தள்ளப் பெறுவார்கள். இதில் இறைவன்தான் தோன் றாத்துணை யாக நின்று இவர்களைக் காப்பாற்ற வேண்டும். ஜூன் திங்கள் ஒருநாள் முசிறி சென்று ஆசிரியர்களைக் கண்டு வணங்கினேன். எல்லோருமே என்னைக் கல்லூரியில்