பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நினைவுக் குமிழிகள்-1 சேர்ந்து பயிலுமாறு ஊக்கினர். என் உழைப்பை நேரில் கண்டு அடிக் டி ஆசி கூறும் கே. ஆர். என்ற கணித ஆசிரியர் கல்லூரியில் நான் சிறந்து விளங்குவேன் என்ற சாத்தியக் கூறுகளை முன்கூட்டியே எடுத்துரைத்தார். இறை யருளாலும் தந்தையையொப்ப இருந்த கே. ஆரின் ஆசியாலும் என் கல்லூரி வாழ்க்கை நன்றாகவே அமைந்த து என்று சொல்லலாம். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று முடிவெடுத் தேன். பெரும்பாலான ஆசிரியர்களும் இக்கல்லூரியையே எனக்குப் பரிந்துரைத்தனர். திருமணம் புரிந்துகொள்ளப் போகும் இளைஞன் திருமணம் தொடங்கும் நாள் வரையிலும் பல இன்டக் கனவு களைக் கண்டு மகிழ்வது போலவே, கலைமகள் அருள் தாண்டவமாடும் கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போகும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்தேன். அதே சமயத்தில் கல்லூரியில் படிக்கும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுக்காலத்திற்கு ஆகும் செலவுக்கு என்ன செய்வது? என்ற ஏக்கமும் கவலையும் அடிநாதமாக உள்ளுர ஒலித்துக் கொண்டிருந்தமையையும் இன்று நினைந்து பார்க்கின்றேன். கலித்தொகைப் புலவன், வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்." என்று கூறியுள்ளதையும் நினைந்து பார்க்கின்றேன். அதே சமயத்தில் செடி நட்டவனுக்குத் தண்ணிர் ஊற்றத் தெரியும் என்று மக்கள் வாக்கில் அடிக்கடி தவழ்ந்துவரும் பழமொழியையும் சிந்தித்துப் பார்க்கும் அறிவு அப்போது இல்லை. அந்தக் காலத்தில் எங்களூர்ப் பக்கத்தில் நன்கு பயின்ற இரண்டு மாணாக்கர்களின் புகழ் நன்கு பரவியிருந்தது. கலி- 10 (பாலை)