பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்தது 277 அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற அவா இருந்தது. அவர்களில் ஒருவராகிய அரங்கசாமியைக் காண்பதற்கு நானும் என்னுடன் பயின்ற A. சுப்பையா என்ற தோழனும் வேங்கடாசலபுரம்’ என்ற ஊர் சென்றோம். அக்காலத்தில் அரங்கசாமி VPR என்று மாணாக்கர் உலகில் புகழ் பெற்றிருந்தார். என்னுடன் வந்த A. சுப்பையாவும் நன்கு படிப்பவன். நல்ல வசதிகள் இருந்தும் அவன் ஏனோ கல்லூரிக் கல்வியைத் தொடரவில்லை. அரங்கசாமி மிக ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பயில்பவராதலால் எங்களை மேற்கல்வி தொடருமாறு வற்புறுத்தினார். இன்னொரு மாணாக்கர் பெயர் அரங்கசாமிதான்; இவர் துறையூருக்கு நான்கு கல் தொலைவிலுள்ள செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் அக்காலத்தில் SPR என்றே புகழ் பெற்றிருந்தார். இவர் ஒருவகையில் எனக்கு நெருங்கிய உறவினர். எனக்கு அத்தை மகன் முறை வேண்டும். நான் பள்ளியிறுதித் தேர்வு எழுதிய ஆண்டு கோடை விடுமுறையில் இவருக்குத் திருமணம் உறுதியாகி இருந்தது. செங்காட்டுப்பட்டியில் நான்கு நாட்கள் திருமணம். அரங்கசாமி செல்வர் வீட்டுப் பிள்ளை. வேளாண்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாளிகை போன்ற பெரிய இல்லம்; மேல் மாடியும் உண்டு; இது மிகவும் விசாலமானது. சாதாரண காலத்தில் பலர் செளகர்யமாகத் தங்கலாம்; திருமண காலத்திலும் பலர் தங்கலாம்: கோடைகாலமாதலால் மாடியில் வெட்டவெளியிலும் ஏதோ விரிப்பைப் போட்டுக்கொண்டு பலர் செளகர்யமாகப் படுத்து உறங்கலாம், திருமணம் மிகவும் கோலாகலமாக நான்கு நாள் நடை பெற்றது. மேளக் கச்சேரி சிறப்பாக அமைந்திருந்தது; 2. துறையூரிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் பத்தாவது கல்லில் உள்ள ஒரு சிற்றுார்.