பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 நினைவுக் குமிழிகள்-1 விருந்தளித்தார். சின்னப் பண்ணை ரெட்டியார் எதிர் வீட்டு இராமச்சந்திர ரெட்டியாரின் நட்பும் கிடைத்தது. சின்னப் பண்ணை ரெட்டியார் வயல், காடு முதலிய இடங்கட்கு என்னைக் கூட்டிச் சென்று காட்டினார். எந்திரம் போல் மனம் அதில் ஈடுபடாமல் அவ்விடங்கட்குச் சென்று வந்தேன். இரண்டு நாட்கள் கழித்துப் பொட்டணம் திரும்பினேன். என் மைத்துனர்தான் குழந்தையைப் பற்றி அதிகம் விசாரித்தார். குழந்தையின் நிறம், முகக்குளி முதலிய விவரங்களைக் கேட்டார். அவர் கேட்ட போக்கு என் மனத்திற்கு உகந்ததாக இல்லை. அதைப்பற்றி விரித்து எழுதவும் விரும்பவில்லை. இப்போது ஒரு பாடல் என் மனத்தில் குமிழியிடுகின்றது. அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப் பொன்னின் அழகும் புவிப்பொறையும்-வன்னமுலை வேசி துயிலும் விறன் மந் திரிமதியும் பேசில் இவையுடையாள் பெண்”* (மலர்ப்பொன்-திருமகள்) கணவனுக்கு மனைவியாக அமையும் பெண்ணிடம் தாயைப் போல் அன்பும், பணிவிடைக்காரியைப்போல் தொண்டும், திருமகளைப் போல் அழகும், நிலமகளைப் போல் பொறு மையும், விலைமாதினைப்போல் இன்பந்தரும் திறனும், அமைச்சர்களைப் போன்ற அறிவும், அமைந்திருக்க வேண்டும் என்கின்றார். இப்படியுள்ள ஒரு பெண்ணுக்குக் கணவனாக அமைபவனும் இவற்றை ஏற்கும் தகுதியுடை யவனாக இருக்க வேண்டுமல்லவா? 21. நீதிவெண்பா-30