பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் சிந்திக்கத் தொடங்கியது 365 பக்கத்திலும் ஆணவ மலம் தலைதுாக்கி நின்றதால் நடுவில் எவரும் இருவரையும் இணைக்க முயற்சி எடுக்கவில்லை. நான் கல்லூரி மாணவன்- உலகியல் நுட்பங்களை நன்கு அறிந்திருந்தாலும்-இதில் தலையிட விரும்பவில்லை. அப்படித் தலையிட்டாலும் 'ஏழைசொல் அம்பலத்திற்கு ஏறாது' என்பதை நன்கு அறிந்திருந்தேன். இல்லத்திலுள்ளாரின் இயல்புகளை நன்கு அறிந்த என் மனைவியும் குழந்தையைப் பார்க்கப்போகும் விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் நானாவது தனியே போய் வரலாம் என்று நினைத்து எ ன் விருப்பத்தைத் தெரிவித்தேன். அ வ ள் ஒப்புக்கொண்டாள். என் மைத்துனரும் ஒருவாறு ஒப்புக் கொண்டார். ஒன்றிரண்டு நாட்களில் (மார்ச்சு-1937) மிதிவண்டியில் (10கல் தொலைவு) எருமைப்பட்டி போய் வந்தேன். அங்குப் போய்வருவதற்கு இரட்டை மாட்டுவண்டியைத் தவிர வேறு வசதிகள் இல்லை. நம் விருப்பப்படி போவதற்கு மிதிவண்டி ஒன்று தான். மூன்றுமாதக் குழந்தை நிலையில் பார்த்தேன். 'ஜனகராஜன்’ என்று திருநாமம் இட்டிருந்தனர். பின்னால் இந்தக் குழந்தையைக் கொண்டு கணவன் மனைவியை இணைத்துவரும் வாய்ப்பு வரும், இறையருள் இருப்பின் அது நடைபெறும் என எண்ணியிருந்தேன். என் மைத்துனர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுவிட்டார் (1942); 1944இல் ஜனகராஜனுக்கு நல்ல கல்வி அளித்து உயர்ந்தவ னாகச் செய்யவேண்டும் என்று நினைத்து துறையூரில் படிக்க வைத்தேன். இறையருள் இல்லாமையால் பையன் அற்பாயுளில் இறந்தான். (இதன் விவரம் பின்னர் வரும் ஓர் குமிழியில்-இந்த நூலின் இரண்டாம் பகுதியில் வெளி வரும்) . இரண்டு நாட்களில் எருமைப்பட்டியில் தங்கி இருந்தேன். ஒருநாள் மிட்டாதார். V, வாசுதேவ ரெட்டியார்