பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நினைவுக் குமிழிகள்-1 சந்தர்ப்பமும் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன். அந்தக்காலத்தில் தன் முனைப்போடு செயல்பட்ட சிந்தனை இப்போது அஃதின் றிச் செயற்படுகின்றது. ஏதேது செய்தாலும் ஏதேது சொன்னாலும் ஏதேது சிந்தித் திருந்தாலும் -மாதேவா நின்செயலே என்று நினதருளா ளேஉணரின் என்செயலே காண்கி லேனே." என்ற குருஞானசம்பந்தரின் வாக்கின் உண்மை இப்போது என் மனத்திற்குத் தட்டுப்படுகின்றது. அவன் அருளால் நடைபெறும் அனைத்தையும் காண்கின்ற பொழுது என் செயலால் நடைபெறுவது என்ற எண்ணமே இல்லாதொழி கின்றது என்ற உண்மையை நன்கு உணர்கின்றேன். வருவதும் தானே வரும்' என்ற பேருண்மையையும் காண் கின்றேன். இப்பொழுது இன்னொரு நிகழ்ச்சியும் நினைவிற்கு வருகின்றது. என் திருமணம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு கருவுயிர்ப்பதற்கு எ ரு ைம ப் பட் டி சென்ற இராசாம்பாளுக்கு டிசம்பரிலோ (1936),சனவரியிலோ (1937) ஆண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகச் செய்தி வந்தது. என் மைத்துனருக்கு இது குறித்து மகிழ்ச்சி ஏற்பட்டதா என்பதை அவர் முகக் குறிப்பிலோ அல்லது பேச்சுவாக்கினாலோ அறிந்துகொள்ள இயலவில்லை. 'திரும்பவும் இல்லத்தில் நுழையக்கூடாது' என்ற தடையுத்தரவு என் மைத்துனர் போட்டதால், பொட்டணத்திலிருந்தும் யாரும் அழைக்கப் போகவில்லை. எருமைப்பட்டியிலிருந்து யாரும் அழைத்து வரவில்லை. இரு T19. சிவபோக சாரம்-45. 20. டிெ. 78.