பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனம் சிந்திக்கத் தொடங்கியது 363 திருக்க வேண்டும், சொந்தக்காரன் தலையில் கட்டி விட்டால், அதுவும் ஓர் ஏழையின் தலையில் கட்டிவிட்டால், அவன் இழுத்த இழுப்பிற்கு வருவான். தொடக்கத்தில் விரோதம் ஏற்பட்டாலும் சொந்த உறவினால் ஒட்டிக் கொள்வதற்கு வழியும் ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் அவர் மனம் எண்ணியிருக்க வேண்டும். இந்த எண்ணங்களினால் முடிவு எடுத்து தன் நண்பர் இராமச்சந்திர ஆச்சாரியைக் கூட்டிக் கொண்டு திருச்சிக்கு வந்து என்னைச் சந்தித்திருக்க வேண்டும். என் ஊழும் அவர் ஊழும் ஒத்துப்போனதால் எங்கள் திருமணமும் பல இன்னல், கட்கு இடையேயும் நடைபெற்றது. இதன் காரணமாக, நான் படிக்க முடியாத ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டேன். திருமணம் ஆனால் மைத்துனர் அரிச்சந்திரனுக்கு அடுத்தபடி யான சத்தியசீலனாக இருப்பார் என்று ந்ம்பி நானும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். இதையெல்லாம் இப்போது எண்ணிப் பயன் என்ன? அப்போது எண்ணினால் மட்டிலும் பயன் உண்டா? பிறகு உண்மைதான் என்ன? வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்து ஆய நூலகத்தும் இல்லை." என்ற ஒளவைப்பாட்டி சொல்வதுதான் உண்மை. இந்த உண்மையை அறிந்து கொள்வதற்கும் ஊழ் வேண்டும் என்பதையும் இப்போது உணர்கின்றேன். இப்படி எல்லாம் என் படிப்பு முற்றுப் பெற வேண்டும் என்றிருந்ததால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பெற்றேன்; திருமணம் செய்து கொள்வதற்கும் ஒப்புதல் தரும் நிலைக்கு வரவேண்டிய 18. நல்வழி-37.