பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 நினைவுக் குமிழிகள்-1 சுரப்பு விடுவதற்குக் கன்றுக்குட்டியைத் தாய் முலையைச் சப்ப விடுவதுபோல் பெண்ணைத் தாய் வீட்டிற்குத் தன்னைப் போலவே விரட்டி விட்டால் என்ன செய்வது? என்று மற்றொருபால் அச்சம். இந்நிலையைச் சிந்தித்துப் பார்த்து என் மைத்துனர் மனம் ஒப்பவில்லை. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கலாம் என்று என் மனம் சிந்தித்தது. பாட்டிக்கும் பேத்திக்கும்தான் நெருக்கம் அதிகமாக இருக்கின்றது. பேத்தி உணவு கொண்டு போனால்தான் பாட்டி உண்பாள். தான் பெற்ற மகள் மீது சிறிது கூடப் பாசம் இல்லை. மாறாக வெறுப்புதான் மிஞ்சி நிற்கின்றது. முன்பின் இயல்பு அறியாத பணக்காரர் வீட்டில் தன் தங்கை வாழ்க்கைப்பட நேர்ந்து, தன் பாட்டி யும் பேத்தியிடமே போக நினைத்தால் என்ன செய்வது? கிழவியை மயக்கிச் சம்பந்தி வீட்டார் சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டால் என்ன செய்வது? சொத்துகள் யாவும் கிழவி பேரில்தானே உள்ளது? அவள் சுயமாகச் சம்பாதித்த சொத்து. இப்படி இக்கட்டான நிலை உண்டாகி விட்டால் பேராபத்தாகிப் போய்விடுமே என்று சிந்தித்து தான் அந்நியருக்குப் பெண்கொடுக்க இசையாதிருக்க வேண்டும்; மனமும் ஒப்பாதிருக்க வேண்டும். தவிர, அந்நியரும் திருமணமான பின்னர் தன் தங்கைைையத் தன் வீட்டில் விட்டு வைக்கமாட்டார்கள். பாட்டி மிகவும் தளர்ந்த நிலை எய்தும்வரை, உண்பதற்கும், கழிப்பிடம் செல்வதற்கும் பிறரை நாடும் நிலை வரும் வரை யாவது தன் தங்கை தன் வீட்டிலிருந்தால் எல்லாம் சரியாய் விடும். இந்நிலையில்-கண்ணும் மங்கிய நிலையில்-பாட்டி அதிகமாக ஆட்டம் போட முடியாது. இந்நிலையில் தங்கைக் கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டாலும் நிலையைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று என் மைத்துனர் சிந்தித்