பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனம் சிந்திக்கத் தொடங்கியது 361 உயரம் இருந்தது. நின்று கொண்டே இதைக் கவனித்சி வேட்டுவ இளைஞன் ஒருவன் விரைந்து வந்து விரலால் அளக்கத் தொடக்கிவிட்டான்; ஒரு சாண் உயரம் இருக்கிறதே! இஃது எந்த வகுப்புக்கு உரியது? இருபதாவது வகுப்புக்கு உரியதாக இருக்குமா? நீங்கள் இருபதாவது வரை படித் திருக்கின்றீர்களா?’ என்று கேட்டான். பாவம் எழுத்து வாசனையே அறியாதவன் என்று எல்லோருமே! அவனுடைய அறியாமைக்கு இரங்கினர். 'இல்லை தம்பி", இஃது எல்லா வகுப்புக்கும் உதவும். ஐம்பதாவது வகுப்புக்கும் செல்லும். இதில் அவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கின்றன” என்று அவன் அறிந்த மொழியிலேயே கூறி அவனுக்கு மகிழ்ச்சியூட்டினேன். 44. என் மனம் சிந்திக்கத் தொடங்கியது 'போது போகத் தெரியும்’-என்று நல்லப்ப ரெட்டியார் சொன்ன வாக்கியம் (குமிழி-40) என் மனத்தில் ஆழப்பதிந்து என்னைச் சிந்திக்க வைத்தது. முன்பின் தெரியாத பணக்காரர்கள் யாவரும் முன்னதாகவே ரூ. 10000/- திருமணச் சபையில் வைக்கச் சொல்லுகின்றனர்; 100 சவரன் நகையைக் காட்டச் சொல்லுகின்றார். வீட்டில் உள்ள என் மைத்துனர் உட்பட ஒருவருக்கும் இந்த நிபந்தனையின் கீழ்ப் பெண் கொடுக்க விருப்பமில்லை என்பது முதற்காரணம். கேட்டவர்கள் யாவரும் வயது தளர்ந்த வர்கள்; இரண்டாந்தாரமாகவே கேட்டனர். கொழுந்து போன்ற ஓர் இளம்பெண்ணை நடுத்தர வயதுடைய கிழவருக் குக் கொடுத்தால் உடற் பொருத்தம், மனப்பொருத்தம், இயல்புப் பொருத்தம் இவற்றில் முரண்பாடு இருக்குமே: இவை பொருந்தாவிட்டால் பெண்ணின் வாழ்க்கை கெடுமே என்ற ஒருபால் அச்சம்; இவர்கள் ஏதாவது சாக்கு போட்டு