பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 நினைவுக் குமிழிகள்-1 எல்லோரின் நகைப்பு மேலும் அதிகமாயிற்று. என்ன செய்வது? எல்லோரும் அவர் நிலையைக் கண்டு கழிவிரக்கம் கொண்டனர். விசைக்குழாயை எடுத்துக் கொடுத்த சிறுவனே இணைப்புக் குழலைத் தனியே எடுத்துக் சக்கரத்திலும் விசைக்குழாயிலும் பொருத்திக் காட்டினான். இந்த நிலை யிலும் அவரால் காற்றடித்துக் கொள்ளத் தெரியவில்லை. பிறகு அந்தச் சிறுவனே இரண்டு சக்கரங்களுக்கும் காற்று அடித்துக் கொடுத்து உதவினான். நல்லப்பரெட்டியார், 'இப்போது வண்டியிலாவது ஏறத் தெரியுமா? தெரியா விட்டால் அச்சிறுவனையே ஏற்றிவிடச் சொல்கிறேன்' என்ற போது சிறுவன் உட்பட எல்லோருமே மேலும் சிரித்தனர். தெரியும்’ என்று சொல்லி மாப்பிள்ளை வண்டி ஏறிச் சென்று விட்டார். குடுமியில் பூச்சுற்றியிருந்த நிலை, களையில்லா முகம்-இவற்றைக் கண்ட அனைவரும் முழுவளர்ச்சி பெறாத மனமுடையவர் என்று அறுதி யிட்டனர். “வாப்பாடு கூடத்தெரியாத இந்தப்"பிரகஸ்பதிக்கு" நம்மூர் பிரகஸ்பதி தேடிச் சென்று பெண்ணைக் கொடுத்தாரே அவரை என்ன செல்வது? எல்லாம் பெண்ணின் தலை எழுத்து! கோடி வீட்டுக் குப்புசாமியின் மகள் மிகவும் கெட்டிக்காரி. தன் மூளையைக் கொண்டு மாப்பிள்ளையை ஒர் ஆட்டு ஆட்டி விடுவாள். அவள் * தாரியத்தால்தான் இப்புதுக் குடும்பம் தலையெடுக்க வேண்டும்' என்று நல்லப்ப ரெட்டியார் சொன்னபோது எல்லோரும் "மெய்தான் மெய்தான்' என்றும், "ஆம், ஆம்', என்றும் சொல்லித் தலையசைத்தனர். இன்னொரு சுவையான நிகழ்ச்சியும் நினைவிற்கு வருகின்றது. ஆனந்தவிகடன் அகராதி அஞ்சல் வழியாக W.P.P.யில் வந்தது. திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது அஞ்சல் சேவகன் பணத்தைப் பெற்றுக்கொண்டு புத்தகத்தைத் தந்தான். கிட்டத்தட்ட அஃது ஒரு சாண்