பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தவிகடன் குறுக்கெழுத்துப் போட்டி 359 கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றுார். புதிதாக மிதிவண்டிப் பழக்கம் உடையவர். இரவலாகவோ வாடகைக்கோ மிதிவண்டி வாங்கிக் கொண்டு அதில் வந்து சேர்ந்தார் மாமனார் வீட்டுக்கு. இரண்டு மூன்று நாட்கள் தங்கினதில் சக்கரங்களில் சற்றுக் காற்று இறங்கியிருந்தது வண்டியைக் கொடுத்தவர்கள் இத்தகைய நிலையைச் சமாளிப்பதற்கு வண்டியிலேயே காற்றடிக்கும் விசைக்குழாயை (Pump) வைத்து அனுப்பியிருந்தனர். மிதிவண்டிப் பழக்கம் புதிதாக உடையவராதல் விசைக்குழாய் வண்டியில் பொருத்தி யிருந்ததைக் கூட அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. இவர் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து நல்லப்ப ரெட்டியார் வீட்டில் விசைக்குழாய் தருமாறு கேட்டார். திண்ணையில் பலர் அமர்ந்திருந்தனர். நல்லப்பரெட்டியார் " வண்டியிலேயே விசைக்குழல் இருக்கிறதே!’ என்று சுட்டிக் காட்டினார். அப்படிக் காட்டியும் அவரால் அஃது இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. திண்ணையருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒடிச்சென்று விசைக்குழாயை வண்டியிலிருந்து எடுத்து அவர் கையில் கொடுத்தான். விசைக்குழாயின் உந்துத் தண்டில் உள்ள இணைப்புச் சாதனத்தை (Connection) எடுத்து சக்கரத்திலும் விசைக் குழாயிலும் பொருந்திக் காற்றடிக்க வேண்டும் என்பதை அறியாத புது மாப்பிள்ளை இணைப்புச் சாதனத்தை எடுக்காமல் அப்படியே சக்கரத்தில் பொருத்த முயன்றபோது திண்ணையிலிருந்தோர் அனைவரும் 'கொல்லென்று' சிரித்து விட்டனர். மாப்பிள்ளையின் முகம் சுருங்கிப் போயிற்று. என்ன செய்வது? நல்லப்ப ரெட்டியார், "பொருத்தி அடிப்பதைக் கூட அறிந்து கொள்ளாத, உன்னிடம் மிதிவண்டியைக் கொடுத்தார்களே! உலக்கைக் கொழுந்து போன்ற உனக்கும் எங்களுர்க்காரர் ஒரு பெண்ணைக் கொடுத்தார்களே!” என்று சொன்னபோது