பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 நினைவுக் குமிழிகள்-1 பரிசு விழுந்தால் அதைக் கொண்டு அவர் படிப்பை முடித்துக் கொள்ளட்டும். நமக்குக் கையைக் கடிக்காமல் இருக்கும்” என்று எண்ணியதாக எனக்குப் புலனாகத் தொடங்கியது நல்லப்ப ரெட்டியாரிடம் இதைத் தெரிவித்தேன். அவர் சொன்னார். 'எனக்கு ஆரம்பத்திலேயே தெரிந்தது. ஊகம் செய்து புரிந்து கொண்டேன். உன்னிடம் சொல்லலாம் என நினைத்தேன். நீயே புரிந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி யாக உள்ளது' என்றார். நான்கு மாதத்தில் ரூ. 100-வரையிலும் செலவாயிற்று. பரிசு விழவில்லை. ஆக்கங் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்.' என்ற வள்ளுவர் வாக்கை நினைத்துக் கொள்வேன். ஒரு சமயம் நல்லப்ப ரெட்டியாரிடம் சொன்னேன்: "நான் எழுதுகிறேன். சீட்டுக்கு (coupon) உரிய கட்டணத்சிை நீங்கள் கட்டுங்கள். பரிசு விழுந்தால் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்' என்று, அவர் சூரர்; அவர் சொன்ன மறுமொழி: "நீயே சட்டி விடு. பரிசு விழுந்தால், பாதித் தொகையில் சீட்டுத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதியை எனக்குத் தந்தால் போதும்’ என்றார். அவருடைய அறிவுக் கூர்மையையும், நாசூக்கான நளினத்தையும், உலகியலறிவையும் கண்டு வியந்து போனேன். திண்ணை நாலு வீதிகளும் சந்திக்கும் முனையிலிருந்தது. எந்தப் பக்கமாக யார் வந்தாலும் திண்ணையில் உட்கார்ந் திருப்பவர்களின் கண்ணில் படாமல் போக முடியாது. வேட்டுவக் கவுண்டர் வீட்டுக்குப் பொங்கலுக்கு ஒரு புது மாப்பிள்ளை வந்து போனார். அவருடைய ஊர் ஐந்தாறு 17. குறள்-493