பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தவிகடன் குறுக்கெழுத்துப் போட்டி 357 வண்ணமிருக்கும். என் மைத்துனர் மேற்கொண்ட பல அவசியமில்லாத செயல்களில் இவை இரண்டும் அவசிய மானவைகளாகவும் பலருக்கும் பயன்படுபவைகளாகவும்இருந்தன. இந்தப் புரோகிதர் ஆனந்தவிகடன் குறுக்கெழுத்துப் போட்டியில் பங்குகொண்டிருந்தார். எப்படியோ இதை என் மைத்துனர் காதில் போட்டு விட்டார். அவர் என்னிடம் இதைத் தொற்றிவிட்டார். வாரந்தோறும் ஆனந்தவிகடன் வரத் தொடங்கியது. Hindu வழக்கமாக வந்து கொண் டிருந்தது. அப்பொழுதெல்லாம் Hinduவுக்கு மாதச்சந்தா ரூ. 4.1-க்கு மேல் இல்லை. ஆனந்தவிகடன் படிப்பதற்கு மிகச் சுவையாக இருக்கும். மணியாரன் வீட்டுத் திண்ணையில் பலருக்குப் படித்துக் காட்டுவேன். சோம்பேறிகளாக உட் கார்ந்திருப்பவர்கட்குக் கேள்வி ஞானத்தை ஊட்டினேன். ஒன்று விட்ட என் சகோதரர் நல்லப்ப ரெட்டியார் இயல்பாகவே நகைச்சுவையாகப் பேசவல்லவர். என் ஆனந்த விகடன் செவியமுதம் அவருக்குப் பேரின்பத்தை விளை வித்தது. சுவைக்கும் பழக்கமில்லாத என் மைத்துனர் கூடச் சுவைக்கத் தொடங்கினார். குறுக்கெழுத்துப் போட்டி-அறிவுக் கூர்மையாகச் சிந்திக்கும் பழக்கத்தைத் தந்தது என்றாலும் அஃது ஒரு சூதாட்டம் நிலையாக வளர்ந்தது. ரூ. 1000/- தான் பரிசுத் தொகை, இதில் என் மைத்துனர் என்னைத் தள்ளியது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் பொழுது போக்காக இறங்கினேன். போட்டியின் முடிவுகள் 'நாரதர்' என்ற வார இதழில் வெளி வந்தன. இதையும் ஆனந்த விகடன் நிறுவனந்தான் வெளியிட்டது. புரோகிதர் அய்யர் சொற்படி ஓர் ஆனந்தவிகடன் அகராதி வாங்க நினைத்தார் என் மைத்துனர். அவர் உள்நோக்கம் வரவரப்புரிந்தது. என் படிப்பின் செலவை ஒப்புக் கொண்டாரல்லவா? 'இதில்