பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நினைவுக் குமிழிகள்-1 வில்லை. எங்குச்சென்றாலும் நான் கல்லூரியில்சேர்வதையே நினைத்துக்கொண்டு கலங்குவேன். சதா கல்லூரியில் சேர்வது பற்றியும் அதற்குப் பணம் காண்பதுபற்றியும் நினைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கிடந்ததால், திருமணத்திற்குப் பின்னர் என் இன்ப வாழ்வு இனிக்க வேண்டிய அளவுக்கு இனிக்கவில்லை. உணர்வு நிலை அடங்கிய நிலையில் அறிவு நிலை செயற்பட்டதே இதற்குக் காரணம் என்று சொல்லலாம். 43. ஆனந்தவிகடன் குறுக்கெழுத்துப் போட்டி சேதமங்கலத்தில் பஞ்சாங்க அய்யர் (புரோகிதர்) ஒருவர் இருந்தார், தெலுங்கு பேசுபவர். அவர் எங்கள் மாமனார் வீட்டிற்கு வழக்கமாக வந்து திவசம் செய்து வைக்கும் புரோகிதர். அவருக்குச் சோதிடமும் தெரியும்அரைகுறையாக, புரோகிதத் தொழிலைத் தவிர படக்கடை ஒன்று நடத்தி வந்தார். எப்படியோ என் மைத்துனர் அவரிடம் நட்பை வளர்த்துக் கொண்டார். நல்ல நல்ல படங்களைக் கண்ணாடி போட்டு விற்று வந்தார். உயர்ந்த ரக ஜெர்மன் அச்சு ரவிவர்மா படங்கள் இருந்தன. பெரிய அளவில் கிருஷ்ணர், இராமர், சிவபெருமான், கெளரிசங்கர், இன்னும் பல படங்கள் கண்ணாடி போட்டு வீட்டில் மாட்டினார். இவற்றைத் தவிர ஒலிப்பதிப்பிக்கும் பெட்டி (Phonograph) வாங்கி பல்வேறு பக்திப்பாடல்கள் கொண்ட இசைத்தட்டுகளை வாங்கி அடிக்கடிக் கேட்பார். இரவு 8 மணிக்கு மேல் 50 பேர்களுக்குறையாத கூட்டம் சதா இருந்து கொண்டே இருக்கும். கே.பி. சுந்தராம்பாள் போன்ற இசை வாணர்களின் பக்திப் பாடல்கள் ஆராவமுதமாய், செவிதுகர் கனிகளாக-இனிக்கும். அடிக்கடி நுகரும் பேறு கிடைத்த