பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கொண்ட சுற்றுலாக்கள் 355 சருக்கரை ஆலையைச் சுற்றிப் பார்த்தோம். பக்கத்து ஊர்களி லிருந்து மாட்டு வண்டிகளிலும் லாரிகளிலும் ஆலைக்குக் கரும்புகள் வந்து கொண்டிருந்தன. அவை வரிசையாக நிறுத்தப்பெற்றிருந்ததைக் கண்டோம். சரக்குடன் லாரி களையும் வண்டிகளையும் நிறுக்கவும் சரக்குகளைக் கொட்டிய பிறகு காலியாகவுள்ள லாரிகளையும் வண்டி களையும் நிறுக்கவும் உள்ள ஏற்பாடுகளினால் சரக்குகளின் எடையைக் கணக்கிட்டதைக்கண்டோம். கரும்புகள் ஆலையில் சிறுசிறுதுண்டுகளாக நறுக்கப்பெறுவதையும், நறுக்கப் பெற்ற துண்டுகள் வரிசையாகப் பிழியும் இடத்திற்குச் செல்வதையும், பிழிந்த பிறகு கரும்புச்சாறு காய்ச்சப்பெறுவதையும், பழுப்பு நிறச் சருக்கரையாக மாற்றப் பெறுவதையும், இறுதியாக மணல் போன்ற சருக்கரை ஓரிடத்தில் கொட்டுவதையும் கண்டோம். இவற்றையெல்லாம் ஆலையில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் எங்கட்கு விளக்கினார். அன்று மாலையே நாமக்கல் திரும்பினோம். நாங்கள்வந்த மாட்டு வண்டியைக் காக்கவைத்திருந்தோம். அந்த வண்டியிலேயே இரவு சுமார் 8 மணிக்கு வீடு வந்தடைந்தோம். பின்பு ஒருநாள் நான், என் மனைவி, என் மாமனார், மாமியார் நால்வரும் கூடுதுறை-பவாணிக்குச் சென்று பவானி ஆற்றிலுள்ள அம்மனை வழிபட்டு வந்ததாக நினைவு; இதைச் சரியாக நினைந்து விவரம் கூற முடிய வில்லை. வெள்ளம் குறைவாக பவானி ஆற்றில் குறுக்கும் நெடுக்குமாக என் மனைவியுடன் நடந்து சென்றது நினைவுக்கு வருகின்றது. எங்களைப் போல் பல தம்பதிகள் வந்து பவானி அம்மனை வழிபட்டதைப் பார்த்தோம். இதை எழுதும்போது பரிபாடலில் காணப்பெறும் பல வையைக் காட்சிகளை நினைவு கூர்கின்றேன். ஆனால் அம்மாதிரியான விளையாட்டுகளை நாங்கள் மேற்கொள்ள