பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 நினைவுக் குமிழிகள் - 1 கொண்டு மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுவதையும் விளக்கினேன்; பிறகு இந்நீர் காவிரியுடன் கலப்பதையும் சுட்டிக் காட்டினேன். அடுத்து அணையின் நெடுக சுருங்கை வழி (Tunnel) இருப்பதைக் காட்டினேன். இந்த அமைப்பி னால் மீதப்படும் சிமெண்டின் அளவும் கருங்கல் சல்லியும் இருபது விழுக்காடு இருக்கலாம் என்று எடுத்துரைத்து, இந்த ஏற்பாட்டினால் அணையின் வலிமையும் அதிகப்படுகின்றது என்றும் விளக்கினேன். சுருங்கை வழியில் செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை என்றிருந்ததால் கதவுகள் பூட்டப் பெற்றிருந்தன. ஆகவே, உள்ளே சென்று பார்க்க முடிய வில்லை. பின்னர் அங்குப் பலவேறு இடங்களில் அமைக்கப் பெற்றிருந்த இளமரக்காக்களைச் (Parks) சுற்றிப் பார்த்தோம். இதற்குள் மணி 12.30 ஆகிவிட்டது. மார்ச்சு மாதத்திலும் மேட்டும் வெயில் தாங்க முடியவில்லை. பிறகு ஓரிடத்தில் (நிழலில்) அமர்ந்து கையிலிருந்த உணவைக் கொண்டு பசி ஆறினோம். ஊரில் பார்க்க வேண்டிய சிறப்பான இடங்கள் இல்லை. திரும்பவும் இருப்பூர்தி நிலையத்திற்குப் போக வேண்டுமானால் சுமார் மூன்று கல் தொலைவு நடக்க வேண்டும். நிழவிலேயே ஒய்வு எடுத்துக் கொண்டு மாலை 3-30க்கு ஒரு சிற்றுண்டி விடுதியில் சிற்றுண்டி காஃபி அருந்திப் பேருந்தில் சேலம் திரும்பினோம். முதல் நாளிரவு தங்கியிருந்த ரெட்டியார் வீட்டிலேயே தங்கி மறுநாள் காலையில் பேருந்தில் புறப்பட்டுப் பொட்டணம் வந்தடைந்தோம். சின்னாட்கள் சென்ற பின்னர் என் மைத்துனர் புகளுர் சருக்கரை ஆலையைப் பார்த்துவரத் திட்டமிட்டார். அவர், நான், என் மனைவி, அவர் நண்பர் இராமச்சந்திர ஆச்சாரி ஆகிய நால்வரும் நாமக்கல்லுக்கு மாட்டு வண்டியில் வந்தோம். பேருந்தில் வேலூரை அடைந்தோம்; வேலூரில் காவிரியாற்றைக் கடந்தால் புகளுரை அடையலாம்.