பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கொண்ட சுற்றுலாக்கள் 353 பட்டே கிடந்தது. மாமனார் அருகிலிருந்தமையால் மனைவி யுடன் நகைத்துப் பேசுவதற்குக் கூட வாய்ப்பில்லை. இதை எழுதும் போது இராமனின் சித்திரகூட நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது. இராமன் சீதையை முன்னிலைப் படுத்திப் பல காட்சிகளைக் காட்டி வருவது போல், நானும் என் மாமனாரையும் மனைவியையும் முன்னிலைப் படுத்திப் பல காட்சிகளைக் காட்டிக் கொண்டே அணையருகில் பல இடங்களைச் சுற்றி வந்தேன். இருப்பூர்தியை விட்டிறங்கியதும், அணை நிரம்பி விட்டால் அதிகமாயுள்ள நீரை வெளிப்படுத்தும் பதினாறு கண்களையுடைய பாலத்திற்கு முதலில் வந்தோம். நான் முசிறியில் உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் பயின்ற போது (1933), சுற்றுலா வந்தபோது பார்த்த இடங் களாதலால் பெரும்பாலான இடங்களை இனங்கண்டு கொள்ள முடிந்தது. பாலத்தில் பதினாறு பெரிய கண்களை மூடுவதற்குப் பதினாறு பெரிய கதவுகள் இருந்தன: அவை மின்விசையால் இயக்கப்பெறுபவை. நீர் நிரம்பி அணைக்கு ஆபத்து வரும் நிலை ஏற்பட்டாலும், அணைக்குத் தண்ணிர் மிதமிஞ்சி வரும் நிலை ஏற்படும்போதும் இக்கதவுகள் திறக்கப்பட்டுத் தண்ணிர் காவிரியில் விடப்படும் என்று விளக்கினேன். மெதுவாக அணையின்மீது நடந்து வந்தோம். கடல் போல் நீர் நிறைந்த அணை அழகாகக் காட்சி அளித்தது. 'இவ்வளவு நீர் இங்கு இருக்கின்றது. பொட்டணம் தண்ணிர் இல்லாக் காடாகக் கிடக்கின்றது. இந்த நிலை பொட்டணத்தில் ஏற்பட்டால் எவ்வளவு அற்புதமாக வேளாண்மை செய்யலாம்?' என்று சொன்னார் என் மாமனார். அணையை விட்டுக் கீழிறங்கி அணையில் பல இடங்களில் திறப்புகள் இருப்பதையும் இவற்றின் வழியாக வரும் நீரைக் –23–