பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நினைவுக் குமிழிகள்-1 இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு 3 என்ற குறள்களின் கருத்தை இக்குடும்பத்தில் எல்லோருமே நன்கு அறிந்திருந்தனர் என்பதை நான் கண்டேன். இவர்கள் சம்பாதிக்கும் பொருள் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்" ஆகும். இங்ங்ணம் மிக்க சிரமத்துடன் ஈட்டிய பொருளைக் கொண்டுதான் என் மாமனார் மேட்டுருக்குக் கூட்டிச் சென்றார். சிந்தனையுள்ள மாமனாராக இருந்தால் ஒரு தொகை கொடுத்து மேட்டுர் மூதலான இடங்கட்குப் போய் சுற்றி வருமாறு பணித்திருக்கலாம்; அவ்வாறு செய்யவில்லை. இந்த இடங்களையெல்லாம் அவரே பார்த்ததில்லை . "தமக்குத் துணையாக இருக்கட்டும் என்று என்னைக் கூட்டிச் சென்றார்; என் மனைவியும் என் கூட வந்தாள்' என்றுதான் இப்பயணம் அமைந்தது. சேலத்தில் அவருக்குத் தெரிந்த ரெட்டியார் ஒருவர் உணவு விடுதி நடத்தி வந்தார்; முதல் நாளிரவு அவர் வீட்டில் தங்கி மறுநாள் காலை மேட்டுர் செல்லும் இருப்பூர்தியில் மேட்டுர் சென்றோம். சரியான உணவு விடுதிகள் மேட்டுரில் இராது என்று கையில் கட்டமுது எடுத்துச் சென்றோம். இந்தப் பயணத்தை எங்கள் தேனிலவு’ என்று சொல்லலாம். காரணம் முதற் பொருள் குறிஞ்சி: கருப் பொருளும் குறிஞ்சி நிலப்பொருளே, அணை, ஆறு, பூங்கா முதலியவை குறிஞ்சி நிலத்தில்தான் அமைந்திருந்தன. இக்கால இளைஞர்கள் திருமண வாழ்க்கையை அநுபவிப்பது போல் நான் அநுபவிக்கவில்லை. இளமையிலேயே பொறுப் புணர்ந்தவனாதலால் இன்ப உணர்ச்சி அறிவுக்குக் கட்டுப் 16. டிெ-752