பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கொண்ட சுற்றுலாக்கள் 351 போடுவேன்’ என்பார். ஏழெட்டு வயது கூட நிரம்பாத அப் பெண் ஏதோ பெரிய நகை தனக்கு வருவதாக எண்ணி உள்ளம் பூரிப்பாள். இந்தச் சவரன்களை என மாமனார் வாரந்தோறும் புதன் அன்று சந்தைக்கு எடுத்துச் செல்வார். சவரனுக்கு எட்டணா இலாபம் கிடைக்குமானால் விற்று விடுவார். ரூ 4, 5 கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவார். இப்படியே சிறுசச் சிறுகச் சேர்த்த பணம் ஓராயிரமாகப் பெருகிற்று. அப்போது ஆறு ஏக்கர் நிலம், கிணறு, இருபது தென்னைமரங்கள் மழைகாலத்தில் நீர்தேங்கி ஒரு வாரத்திற்குப் போதுமான நீர்தேங்கும் குட்டை இவை அடங்கிய நிலம் விலைக்கு வந்தது. அதை ரூ. 1000/-க்கு வாங்கினார். நல்லநிலம்: மழைபெய்து கிணற்றில் நீர் இருக்கு மாயின் நல்ல மகசூல் எடுக்கலாம். கிணறு முழுவதும் வியாபித்துள்ள கரும்பாறை வாய்த்து விட்டதால் கிணற்றை ஆழப்படுத்த முடியவில்லை. நல்ல மழை பெய்யுங்காலத்தில் கிணறு நீரால் நிரம்பி விடும். வேளாண்மை நன்கு பலிக்கும். இந்தச் சொத்து அவருக்கு வந்ததும் மாமியாரிடமும் மனைவியிடமும் நல்ல மதிப்பு ஏற்பட்டது. அடிக்கடி மகளிடம் 'இந்த நிலம் உனக்குத் தான்; எனக்குப்பின் உன்னைச் சேருமாறு எழுதி வைப்பேன்’ என்று ஆசை காட்டிக் கொண்டே காலம் கழித்தார். (இந்த நிலம்தான் 1960இல் ரூ. 30,000/- ஆயிரத்திற்கு விற்கப்பட்டது) இந்தக் குடும்பத்தில் எல்லோருக்கும் பணத்தின் மீதிருந்த பற்றும் பாசமும் பிள்ளைகளின்மீது இல்லை என்பதை என்னால் அறிய முடிந்தது. இந்த நிலையைப் பரவலாக எங்கும் காண முடிகின்றது. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்' 15. குறள்-751