பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 நினைவுக் குமிழிகள்-1 ஒரு நூறு ரூபாய்வரை சேர்ந்தால், அதனைக் கொண்டு எட்டு சவரன் வாங்குவார். அக்காலத்தில் (1930) சவரன் விலை ரூ 12, 13க்குமேல் இல்லை. நாமக்கல் வட்டத்தில் "புதன் சந்தை' என்ற ஒரு சந்தை வாரந்தோறும் புதன் கிழமையன்று கூடும். அங்குத் தாய் தந்தையரைத் தவிர அனைத்தையும் கொள்முதல் செய்யலாம். வேளாண்மையில் ஒய்வு கிடைக்கும்போது - அல்லது புதனன்று தம்மைத் தோட்ட வேலையினின்றும் விடுவித்துக் கொண்டு - காலை உணவு கொண்டு சந்தைக்கு நடந்தே செல்வார். குறுக்கு வழியில் இரண்டு கல் தொலைவைக் கடந்து சந்தையை அடையலாம். வாங்கிய சவரனை வீட்டுக்குக் கொணர்வார். அடிக்கடி சரவன்களை எடுத்துப் பார்த்து கொண்டிருப்பார். அறுசுவை உண்டியை உண்ணுங்கால் மகிழ்ச்சி உண்டா கின்றது. கற்றவர்கள் கவிதையைப் படித்துச் சுவைக்குங்கால் இன்பம் உண்டாகின்றது. நிலக்கிழார் தோட்டத்திற்குச் சென்று தென்னை மரங்கள், மாமரங்கள், கொய்யா மரங்கள் ஆகியவை பயன் தருவதைக் கண்டும்; பல ஏக்கர் நிலத்தில் மிளகாய் பயிரிடப் பெற்று நன்றாகக் காய்ப்பதைக் காணும் போதும்; பல ஏக்கர் நிலத்தில் குச்சி வள்ளிக் கிழங்குச் செடி கள் வளர்ந்து எங்கும் பச்சை மயமாய்க் காணப்படும் காட்சியைக் காணுந்தோறும்; பச்சைப் பட்டு விரித்தாற் போன்று நெற்பயிர்கள் வளர்ந்து நிற்கும் காட்சியை நோக்குந்தோறும் இப்படி நீர் வளமிக்க நிலவளத்தைக் காணுந்தோறும் நிலக்கிழார் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இத்தகைய மகிழ்ச்சியை வங்கிக் கணக்கு களில் பண இருப்பைக் காட்டும் வெறும் எண்களைக் கண்டே களிப்பார் வணிக மன்னர், ஆலை முதலாளி. என் மாமனார் இந்தச் சவரன்களைத் தம் அருமை மகளுக்கு அடிக்கடிக் காட்டி, "உன் திருமணத்திற்கு என் பெயர் நினைவில் இருக்குமாறு பெரிய நகை செய்து