பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கொண்ட சுற்றுலாக்கள் 349 நாட்டுப்புறத்தில் நடைமுறையில் இதனைக் காணலாம். நகர வாழ்க்கையில் இதே நிலைதான். கல்லானே யானாலும் கைப்பொருள் ஒன் றுண்டாயின் எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்; இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்; செல்லாது அவன் வாய்ச் சொல். ' என்று பாட்டியார் நாட்டு நடப்பை அன்றே பட்டவர்த் தனமாகச் சொல்லிச் சென்றுள்ளார். சொத்துக்கு ஆளாக வந்தாரேயன்றி சொத்தை நிர்வகிப்பதில் எந்தவித உரிமையையும் இல்லாதவர். எல்லாவற்றையும் மாமியார் நாகம்மாள்தான் தன் பொறுப்பில் வைத்துக் கொண் டிருந்தாள். ஏதோ பண்ணையாள்போல் வயலுக்குச் செல்லல், கூலியாட்களிடம் வேலைவாங்கல், வீடு வருதல், உணவு கொள்ளல், மீண்டும் தோட்டத்திற்குச் செல்லல் - இம்மாதிரி ஒர் எந்திர வாழ்க்கையில் காலங்கழித்துக் கொண்டிருந்தார். பணம் இருந்தால்தான் ஒருவருக்கு மதிப்பு உண்டாகும் என்பதை நேரில், தம் அதுபவத்தில், கண்டவரல்லவா? தம் மாமியாரிடம் செல்வம் இருப்பதால் தானே எல்லாரையும் ஆட்டி வைக்கின்றாள்! என்பதை நன்கு புரிந்து கொண்டவர். எனவே தாமும் சிறிது சிறிதாகப் பொருள் சேமித்து வரலானார். பெரியதாக வருமானம் உள்ள பண்ணையில் இஃது எளிதான செயல் . எப்படியோ அதையும் இதையும் விற்றுப் பணத்தைச் சேர்க்கலாம். தாம் சேமிப்பதில் செலவு இல்லை. 14. நல்வழி - 34