பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 நினைவுக் குமிழிகள்-1 அப்படியும் ஏப்பம்விடும் கவந்தர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் உறவினர்கள் அனைவருமே வட்டியும் முதலுமாக எப்படியாவது ஆண்டவன் கொடுக்கச் செய்து விடுவான் என்றார்கள். இத்தகைய பழைய எண்ணங்கள் எல்லாம் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. பெரியோர்களின் வாக்கும் ஊழும் இருந்த தனால்தான் பெண்ணை வலிந்து என் தலையில் கட்டி னார்கள். ஆனால் பணத்தை இப்போதும் ஏமாற்றி விட நினைத்தார்கள் என்பதைப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தின. ஆனால் இறைவன் அருளால் கிட்டத்தட்டப் பத்தாயிரம் ரூபாய் ஆயுதப் பிரசவம்' போல் எங்களை வந்தடைந்தது. இதன் விவரம் இந்நூலின் இரண்டாம் பகுதியில் ஒரு குமிழியில் வெளிவரும். குமிழி-42 42. மேற்கொண்ட சுற்றுலாக்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்முன் பொட்டண வாழ்க்கையில் (டிசம்பர் 36 முதல் மே 37 வரை) மூன்று சுற்றுலாக்களை மேற்கொண்டதாக நினைவு. முதல் சுற்றுலாவுக்கு என் மாமனார் என்னையும் என் மனைவியையும் இட்டுச் சென்றார் - மேட்டூர் அணைக்கு. என் மாமனார் செலவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் ஆலத்துடையாம்பட்டி (திருச்சி மாவட்டம்) என்ற சிற்றுாரைச் சேர்ந்தவர். பொட்டணத்தில் (சேலம் மாவட்டம்) திருமணம் புரிந்துகொண்டு மாமனார்வீட்டில் சொத்துக்கு ஆளாக ஐக்கியமானவர். உறவுமுறைத் திருமணம் இது. இந்த உலகில் செல்வத்தை வைத்து ஒருவரை மதிப்பது போல் கல்வியை வைத்து மதிப்பதில்லை.