பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பழைய நிகழ்ச்சி 347 பாதுகாப்பாக இருக்கும்பொருட்டுத் தம் தமக்கையாரிடம் பணத்தைப் பெருக்கி வரும்படிக்கொடுத்ததாகவும் சொல்லக் கேட்டேன். இந்தச் செய்தியை என் கோடை விடுமுறைச் சுற்றுலாவின்போது எல்லா உறவினர்கள் மூலமும் அறிந்தேன். என் தந்தையார் இறந்ததும் மாமியார் தன்னை ஐயுற்றுச் சொத்தினை விற்றுப் பணமாகத் தம் தமக்கையிடம் கொடுத்து வைத் திருப்பதை அறிந்த என் அன்னையார் பொட்டணம் சென்று தம் மாமியார் தந்த தொ ை யைத் தம்மிடம் சேர்ப்பிக்கும்படி வற்புறுத்தியதாகவும், அவர்கள் பையன் தலையெடுக்கட்டும்; தந்து விடுகின்றோம் என்று சொன்னதாகவும் உறவினர்கள் அனைவருமே ஒரு மனத் துடன் சொன்னார்கள். என் அன்னையாரும் பையன் தலையுடன்தான் இருக்கின்றான்; இப்போதே கொடுக்கலாம்’ என்று கிண்டலாகச் சொன்னதாகவும் இதற்கெல்லாம் பொட்டணத்தார் அசையவில்லை என்றும் விவரமாகச் சொன்னார்கள். ஆனால் என் அன்னை யார் சில உறவினர்களைப் பொட்டணத்திற்கு இட்டுச் சென்று எங்கள் பணம் ரூபாய் 3000 = ம் நாகம்மாளிடம் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்தத் தகவலினால் யான் அறிந்த உண்மை: தன்ஆ யுதமும் தன்கைப் பொருளும் பிறன்கையில் கொடுக்கும் பேதையும் பதரே. என்ற அதிவீரராம பாண்டியரின் வாக்கின் உண்மை அந்தச் சிறு வயதிலேயே எனக்குப் புலப்பட்டது. யாதொரு எழுத்து ஆதாரமுமின்றித் தரும் பொருள் எவராலும் ஏப்பம் விடப்படும் என்பது ஒரு முட்டாள் கூட அறிவான். எழுத்து மூலம் ஆதாரத்தைப் பெற்றுக் கொண்டு பணம் தந்தாலும் 13. வெற்றிவேற்கை-71