பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 நினைவுக் குமிழிகள்-1 காதாக இதைக் கிருஷ்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன். அவர் விசாரிப்பதாகத் தெரிவித்தார். நான் சற்று வெளி யிலிருந்தபோது கணவன் மனைவியரிடையே நடைபெற்ற வாக்குவாதம் என் செவியில் விழுந்தது. ஆனால் மாலையில் மறைந்த பணம் பையில் காணப்பட்டது. கிருஷ்ணசாமி ரெட்டியார் காரணம் கேட்க வேண்டாம் என்று 144 போட்டார்; மெளனமானேன். பாகவதர் கிருஷ்ணசாமி ரெட்டியாரின் (முத்தையாலு ரெட்டியாரின் மருமகன்) தொடர்பும் ஏற்பட்டது. கூண்டுக் கிளிபோல் சிற்றுாரில் அடைந்து கிடந்த எனக்கு இவ்வாறு (15-25) நாட்கள் வெளிச் சென்றது மிகப் பயன் விளைவிப்பதாக இருந்தது. அந்தச் சின்ன வயதில் உலக நடப்பை ஓரளவு புரிந்து கொள்ளவும் முடிந்தது. உறவினர் களின் குடும்ப நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. என் அன்னையார் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு செய்தி உறுதிப்பட்டது. என் தந்தையார் அற்ப ஆயுளை யுடையவர் என்று சோதிடர் சொல்ல (அப்படியே அற்ப ஆயுளுடன் 27.அகவையில் இறந்தார்; அப்போது எனக்கு 3 வயது கூட நிரம்பவில்லை) என் பாட்டியார் (இரண்டாந்தார மாக என் தாத்தாவுக்கு வாழ்க்கைப்பட்டவர்) கணவனை இழந்துவிட்ட நிலையிலுள்ளவர் தம் பேரிலுள்ள நிலங் களையெல்லாம் விற்று சுமார் ரூ 3000/= பொட்டணத் திலுள்ள தம் தமக்கை நாகம்மாளிடம் கொடுத்து விட்ட தாகவும், நான் வளர்ந்த பிறகு (தலையெடுத்த பிறகு) என்னிடம் (வட்டியுடன்) சேர்ப்பிக்கும்படிச் சொன்னதாகவும் என் அன்னையார் மூலம் அறிந்திருந்தேன். அப்படிக் கொடுக்காவிட்டால் என் அன்னையார் நிலத்தை விற்றுப் பெரகம்பியில் தம் அண்ணனிடம் தந்து விடுவார் என்றும், என் தாய் மாமன் ஒரு கால் அதை ஏப்பம் விட்டாலும் விடக்கூடும் என்று ஐயப்பட்டதாகவும், அதனால் அப்பணம்