பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 நினைவுக் குமிழிகள்-1 துறையூரில் அவரை நேரில் பார்த்தவர்கள் ஒரு சிலரே. இவருக்கு மூன்று ஆண் மக்கள். அவர் தம் துணைவியாரையும் மக்களையும் அரண்மனையை விட்டு விரட்டிவிட்டு வேறு விதமாகச் சிற்றின்பத்தை நுகர்ந்து வந்தவர். மனைவிமாரும் பிள்ளைகளும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிழைப்புத் தேவைகட்காக (Maintenance) ஒவ்வொருவரும் திங்கள் ஒன்றுக்கு ரூ250 = வீதம் தொகை பெற்று வாழ்ந்து வந்தனர். இவர்களுள் மூத்தவருக்கு ஒரு மகன் உண்டு, இவரும் இவர் மனைவியும் மறைந்தனர். சிறுவனுக்கும் பாட்டிக்கும் சிற்றப்பன்மார்கள் உதவியாக இருந்தனர். தந்தையைவிட்டுப் பிரிந்து வந்துவிட்டதனால்தான் இருவரும் உயர்கல்வி பெற்று வழக்குரைஞர்களாக வரமுடிந்தது. பிரசன்ன விசய வேங்கடாசலதுரை, அவர் தாயார், அண்ணன்மகன் சிறுவன். இவர்கள் திருச்சியில் வாழ்ந்து வந்தனர். விசய வேங்கடாசல துரை திருச்சியில் வழக்குரைஞர் வேலை பார்த்து வந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (அ த ன் தொடக்க காலத்தில்) தமிழ் பி. ஏ. பயின்று முதல் வகுப்பில் முதல்வராகத் தேர்ந்தவர். தமிழ் இலக்கண இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவராக இருந்தார். நீதிமன்றத்துக்கு அலங்காரபுருஷராகப் போய்வுந்து கொண்டிருந்தாரேயன்றி தொழிலில் சிறக்கவில்லை. எவருடனும் அதிகமாகப் பேசுவது மில்லை; தாம் கற்ற தமிழறிவைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதுமில்லை. இண ருழ்த்தும் நாறாமவரணையராகத்" திகழ்ந்தார் என்று சொல்லி வைக்கலாம். இவருடைய அண்ணன் மகன், தம் பாதுகாப்பிலிருந்தவன், பள்ளியிறுதி வகுப்பைக் கூடத்தாண்ட முடியாதவனாகிவிட்டான். பெரு நிலக் கிழவரின் சொத்துமுழுவதற்கும் இவன்தான் உரியவன் 1. குறள்-650(சொல்வன்மை )