பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பதற்குப் பணஉதவி 369 பிரசன்ன முத்து வேங்கடாசல துரை து ைற யூ ரி ல் வழக்குரைஞராகத் தொழில் நடத்திவந்தார். இவரும் தொழிலில் சிறக்கவில்லை. நீதிமன்றத்துக்கு (Munsif8 court) எதிரில் வீடு இருந்தது. இவரும் நீதிமன்றத்தின் 'அல்ங்காரபுருஷரே'. பெரிய குடும்பத்தில் பிறந்தவரா தலால் மதிப்புடன் திகழ்ந்தார். நான் இடை நிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேறித் தேர்வுமுடிவுகள் செய்தித் தாளில் வெளிவந்த அன்று கோட்டாத்துாரில் இருந்தேன். அப்போது இவர் சட்டமன்ற மேலவைத் தேர்தலில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் காட்டுப் புத்துரர் பெரு நிலக்கிழவர் திரு சப்தரிஷிரெட்டியாகுக்காக வாக்காளர் களை நாடிக் கோட்டாத்துாருக்கு வந்திருந்தார். அப்போது இவருக்கு அறிமுகமானேன். பின்னர் சான்றிதழ், பரிந்துரைக் கடிதம் இவை பெறப் போகும்போது என்னை எளிதாக அடையாளம் கண்டு கொண்டு அவற்றை வழங்கினார். கல்லூரியில் சேர்ந்ததும் இந்தப் பரிந்துரைகளோடு ரெட்டிஜன சங்கத்திற்கு முதல்வர் சான்றிதழுடன் விண்ணப் பம் அனுப்பினேன். இரண்டுதிங்களில் ஆண்டுடொன்றுக்கு ரூ.100/=வீதம் வழங்குவதாகவும், அது மாதம் ஒன்றுக்குப் பத்துருபாவீதம் வழங்கப்படும் என்றும், இரண்டாவது ஆண்டில் வேண்டுகோளைப்புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் ரெட்டிஜன சங்கத்திலிருந்து கடிதம் வந்தது. அக் காலத்தில் இஃது எனக்குப் பேருதவியாக இருந்ததால் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். அந்தக் காலத்தில் கல்லூரியில் கட்டணம் ஆண் டொன்றுக்கு ரூ90i=தான். இதைத்தான் ரெட்டிஜன சங்கம் வழங்கிவந்தது. சங்கத்தின் மூலம் மாதம்ரு 10/iதம் பத்து மாதத்திற்கு வழங்கிவந்தது, இளங்கலை வகுப்பில் பயின்று –24–