பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 நினைவுக் குமிழிகள்-1 வந்தபோது இரண்டாண்டுசட்கு இத்தொகை பெற்றேன். இக்காலநிலையை வைத்துப் பார்க்கும்போது இத்தொகை மிகக்குறைவாகத் தோன்றினாலும், அக்காலத்தில் இது பேருதவியாக இருந்தது. உணவு விடுதியில் உண்போருக்கு இத்தொகை இரண்டு வேளை உணவுக்குப் போதுமானதாக இருந்தது. மாதாமாதம் முதல்வாரத்தில் பணவிடை மூலம் ரூ9-14-0 வரும்; இரண்டனா அஞ்சல் சேவகனுக்குத் தருவேன். ரு 9.12-0 என்செலவுக்கு ஆகும். காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.” என்ற குறளையும், அக்கால நோக்குவதல்லது பொருள் நோக்கலாகா தென்பதாம்’ என்ற பரிமேலழகரின் உரை யையும் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன். குமிழி-46 46. மீண்டும் கல்லூரி வாழ்க்கை திலைவன் தலைவியை மணந்து கொண்டு இல்வாழ்க் கையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் தலைவியை விட்டுப் பிரியும் வாய்ப்புகள் நேரிடும் என்று அகத்திணை இலக்கியங்கள் கூறுகின்றன. அகப்பொருள் நூல்களில் ஆறுவித பிரிவுகள் கூறப்பெறுகின்றன. இறையனார் களவியல் என்னும் நூலில், ஓதல் காவல் பகைதணி வினையே வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்(று) ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே", 2. குறள் - 102 (செய்ந்நன்றியறிதல்) 1. இறை. கள. நூற். 35